search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காட்டுப்புத்தூரில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பது குறித்த ஆலோசனை கூட்டம்
    X

    காட்டுப்புத்தூரில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பது குறித்த ஆலோசனை கூட்டம்

    • கழிவு நீர் வடிகால்கள் வாய்க்காலில் கலப்பதை தடுப்பது தொடர்பாக காட்டுப்புத்தூர் தேர்வுநிலை பேரூராட்சி பகுதிகளில் ஆய்வு செய்யப்பட்டது.
    • கழிவுநீரை ஒரே இடத்தில் சேகரித்து அதை சுத்திகரித்து மறுசுழற்சி செய்து கழிவு நீரை விவசாயத்துக்கு பயன்படுத்துவது

    திருச்சி :

    திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் தேர்வுநிலை பேரூராட்சியில் திருச்சி மாவட்ட கலெக்டர் அறிவுரைப்படி கழிவு நீர் வடிகால்கள் வாய்க்காலில் கலப்பதை தடுப்பது தொடர்பாக காட்டுப்புத்தூர் தேர்வுநிலை பேரூராட்சி பகுதிகளில் ஆய்வு செய்யப்பட்டது.

    கழிவுநீரைமறுபயன்பாட்டிற்கான ஏற்பாடாக வடிகால் கழிவுநீரை ஒரே இடத்தில் சேகரித்து அதை சுத்தி கரித்து மறுசுழற்சி செய்து கழிவு நீரை விவசாயத்துக்கு பயன்படுத்துவதற்கான கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க காட்டுப்புத்தூர் தேர்வுநிலை பேரூராட்சியின் செயல் அலுவலர் ச.சாகுல்அமீது தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    இக்கூட்டதிற்கு திருச்சி ஸ்கோப் இயக்குநர்.பத்மஸ்ரீ டாக்டர் சுப்புராமன், கொச்சின் நீர்மேலாண்மை வல்லுநர் ஆனந்தன், தூத்துக்குடி ஆர்க்கிடெக்நிபுணர்பொறியாளர்ஹயாஸ் மற்றும் காட்டுப்புத்தூர் பேரூராட்சி இளநிலை உதவியாளர் ராஜேந்திரன் துப்புரவு மேற்பார்வையாளர் (பொ) கண்ணன் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.

    மேலும் காட்டுப்புத்தூர் பேரூராட்சி பகுதிகளில் உள்ள வடிகால்களை பார்வையிட்டனர்.

    Next Story
    ×