என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
செல்போனில் அரட்டை-தாத்தா கண்டித்ததால் பிளஸ் 2 மாணவி மாயம்
Byமாலை மலர்2 March 2023 1:36 PM IST
- தாத்தா கண்டித்ததால் பிளஸ் 2 மாணவி மாயமானார்
- இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி:
திருச்சி பொன்மலை கணேசபுரம் ஆறாவது தெரு பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதரன். இவரது மனைவி மல்லிகா (வயது 33). இந்த தம்பதியரின் மகள் தானேஸ்வரி. இவர் பொன்மலைப்பட்டி பகுதியில் உள்ள ஒரு தனியார் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார்.விரைவில் பொதுத்தேர்வு எழுத இருக்கும் அந்த மாணவி எந்த நேரமும் செல்போனும் கையுமாக இருந்துள்ளார். மேலும் ஒரு இளைஞரிடம் அவர் செல்போனில் நீண்ட நேரம் அரட்டை அடித்து வந்தார். இதை பார்த்த அவரது தாத்தா பேத்தியை கண்டித்தார்
இந்த நிலையில் வழக்கம்போல் பள்ளிக்கு புறப்பட்டு சென்ற தானேஸ்வரி பின்னர் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். ஆனால் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இது குறித்து மல்லிகா பொன்மலை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×