என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கஞ்சா விற்ற 3 பேர் கைது
- கஞ்சாவிற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்
- ஒன்றரை கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது
திருச்சி:
திருச்சி மாநகரம் மில் காலனி மாரியம்மன் கோயிலின் பின்புறம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு துளசி(வயது73) என்பவர் கஞ்சா விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. அரியமங்கலம் போலீசார் அவரை கைது செய்ததோடு அவரிடம் இருந்த 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் திருச்சி மாநகரம் சிந்தாமணி பஜார் பூசாரி தெருவில் கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் கோட்டை போலீசார் சிந்தாமணி காந்தி நகரை சேர்ந்த ரவிச்சந்திரன்(22), சதீஷ்குமார்(21) என்ற மேலும் 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒன்றரை கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட ரவிச்சந்திரன் மீது ஏற்கனவே 13 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் சதீஷ்குமார் மீது இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.