என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  பள்ளி மாணவிக்கு தாலி கட்டிய வாலிபர் மீது வழக்கு
  X

  பள்ளி மாணவிக்கு தாலி கட்டிய வாலிபர் மீது வழக்கு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • திருச்சி அருகே பள்ளி மாணவிக்கு தாலி கட்டிய வாலிபர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்
  • இரு தரப்பினரும் நெருங்கிய உறவினர்கள் என்பதும், மணமகன் நாகராஜன் தந்தை உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதால் அவசர அவசரமாக திருமணத்தை நடத்தி உள்ளனர்

  திருச்சி:

  திருச்சி மாவட்டம் லால்குடியை அடுத்த புள்ளம்பாடி தைலாகுளம் பகுதியில் குழந்தை திருமணம் நடைபெறுவதாக புள்ளம்பாடி வட்டார சமூக நலத்துறை விரிவாக்க அலுவலர் பாலசுந்தரிக்கு தகவல் கிடைத்தது. உடனே அவர் சம்பவ இடம் விரைந்து சென்றார்.

  ஆனால் சற்று நேரத்திற்கு முன்பாக திருமணம் நடந்து முடிந்து விட்டது. விசாரணையில் புள்ளம்பாடி தைலாகுளம் பகுதியைச் சேர்ந்த நாகராஜ் (வயது 20)என்ற இளைஞர் 18 வயது பூர்த்தியாகாத பிளஸ்-2 மாணவி ஒருவரின் கழுத்தில் தாலியை கட்டி இருப்பது தெரியவந்தது.

  உடனடியாக பாலசுந்தரி லால்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் மாலதி மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்தனர்.

  பின்னர் பிளஸ்-2 மாணவிக்கு தாலி கட்டிய நாகராஜ் அவரது தந்தை பொன்னுசாமி தாயின் நிர்மலா மற்றும் பிளஸ் 2 மாணவியின் தந்தை மூக்கன், தாய் தெய்வானை ஆகிய 5 பேர் மீது குழந்தை திருமண தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

  அதன் பின்னர் மாணவியை மீட்டு திருச்சியில் உள்ள ஒரு காப்பகத்துக்கு அனுப்பி வைத்தனர்.

  இரு தரப்பினரும் நெருங்கிய உறவினர்கள் என்பதும், மணமகன் நாகராஜன் தந்தை உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதால் அவசர அவசரமாக திருமணத்தை நடத்தி சிக்கிக் கொண்டதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

  Next Story
  ×