என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  திருச்சியில் பொது மக்களை கத்தியை காட்டி மிரட்டிய 5 பேர் கைது
  X

  திருச்சியில் பொது மக்களை கத்தியை காட்டி மிரட்டிய 5 பேர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கத்தியை காட்டி மிரட்டி பணத்தை பறித்த சங்கிலியாண்டபுரம் பகுதியை சேர்ந்த ஜஸ்டின் ஜேசுராஜ் (24) என்பவரை பாலக்கரை போலீசார் கைது செய்துள்ளனர்.
  • சுரேஷ் தனது மனைவியை மருத்துவமனையில் விட்டு விட்டு பைக்கில் திரும்பி வந்த போது அவரை சம்பத் என்பவர் மிரட்டி பணம் பறித்து தப்பியோடினார்.

  திருச்சி :

  திருச்சி பாலக்கரை சங்கலியாண்டபுரம் வள்ளுவர் நகரை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 48). இவர் மணல் வாரித்துறை பகுதியில் உள்ள மதுபான கடையில் காசாளராக பணிபுரிந்து வருகிறார். சம்பதவன்று மதுபான கடைக்கு ரவிச்சந்திரன் சென்று கொண்டிருந்த போது அவரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி பணத்தை பறித்த சங்கிலியாண்டபுரம் பகுதியை சேர்ந்த ஜஸ்டின் ஜேசுராஜ் (24) என்பவரை பாலக்கரை போலீசார் கைது செய்துள்ளனர்.

  இதேபோன்று திருச்சி சிந்தாமணி அண்ணாநகர் புதிய சேர்ந்தவர் செல்வம் (32), கூலி தொழிலாளி. இவர் சம்பவத்தன்று சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது சங்கரன் பிள்ளை ரோடு பகுதியை சேர்ந்த முரளி குமார் (21) என்பவர் கத்தியை காட்டி மிரட்டி பணத்தை பறித்துக் கொண்டு ஓடினார். இது தொடர்பாக செல்வம் கோட்டை போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை திருடிய முரளி குமாரை கைது செய்தனர்.

  திருச்சி பெரிய மிளகு பாறை காமராஜர் தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (32). சம்பவத்தன்று இவர் திருச்சி அரசு மருத்துவமனையில் தனது மனைவியை விட்டுவிட்டு மோட்டார் சைக்கிளில் வந்தபோது, அவரை வழிமறித்து திருச்சி பாலக்கரை காஜா பேட்டை பகுதியை சேர்ந்த சம்பத்ராஜ் (32)என்பவர் கத்தியை காட்டிய மிரட்டி சுரேஷிடம் இருந்த பணத்தை பறித்து கொண்டு ஓட முயன்றார்.

  இதையடுத்து பொதுமக்கள் அவரை உடனடியாக பிடித்து திருச்சி அரசு மருத்துவமனை போலீசில் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பத் ராஜா கைது செய்துள்ளனர்.

  இதேபோன்று திருச்சி எடமலைப்பட்டி புதூர் எம்ஜிஆர் நகர் சேர்ந்தவர் சகாய குமார் (44). ஆட்டோ டிரைவரான இவர் இவரை மிரட்டி அவரிடம் இருந்து பணத்தை பறித்த மணிகண்டம் அம்பேத்கர் தெருவை சேர்ந்த மகேந்திரன் (21) சத்யா (21) ஆகிய 2 பேரையும் எடமலைப்பட்டி புதூர் போலீசார் கைது செய்துள்ளனர்.

  Next Story
  ×