search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்சியில் 45 ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் 2023-ம் ஆண்டில் முடிக்கப்படும் - மாநகராட்சி அதிகாரிகள் உறுதி
    X

    திருச்சியில் 45 ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் 2023-ம் ஆண்டில் முடிக்கப்படும் - மாநகராட்சி அதிகாரிகள் உறுதி

    • திருச்சி மாநகராட்சி பகுதியில் கடந்த 2018-ல் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் தொடங்கப்பட்டன. இதில் 83 திட்டப்பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டது.
    • சத்திரம் பஸ் நிலையம் மேம்படுத்துதல், தில்லை நகர் வணிக வளாகம், பாதாள சாக்கடை பணிகள், புதிதாக 16 பூங்காக்கள் என மொத்தம் 38 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

    திருச்சி,

    திருச்சி மாநகராட்சி பகுதியில் கடந்த 2018-ல் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் தொடங்கப்பட்டன. இதில் 83 திட்டப்பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டது. அதில், சத்திரம் பஸ் நிலையம் மேம்படுத்துதல், தில்லை நகர் வணிக வளாகம், பாதாள சாக்கடை பணிகள், புதிதாக 16 பூங்காக்கள் என மொத்தம் 38 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

    மீதமுள்ள 45 திட்டப் பணிகளில் காந்தி மார்க்கெட் அருகாமையில் புதிய மீன் சந்தை, இ.பி. ரோடு பகுதியில் 88 லாரிகளை நிறுத்தும் வகையிலான சரக்கு முனையம், புத்தூர் பகுதியில் மேலும் ஒரு வணிக வளாகம், பஞ்சப்பூர் சோலார் பவர் பிளாண்ட் உள்ளிட்ட சில முக்கிய பணிகள் இடம் பெற்றுள்ளன.

    இதில் புத்தூர் வணிக வளாகம் மற்றும் பஞ்சப்பூர் சோலார் பவர் பிளாண்ட் உள்ளிட்ட சில பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. சோலார் பவர் பிளாண்ட் பணி முடியும் தருவாயில் இருப்பதாக அதிகாரிகள் உறுதிபட தெரிவித்தனர்.

    இந்த ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை ஐந்தாண்டு காலத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டது.கொரோனா பேரிடர் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் சத்திரம் பஸ் நிலைய பணிகள் தாமதமானது. இருப்பினும் மீதமுள்ள 45 திட்டப் பணிகளை திட்டமிடப்பட்ட 2023 மார்ச் மாதத்துக்குள் செய்து முடிக்கப்படும் என மாநகராட்சி பொறியாளர் ஒருவர் தெரிவித்தார்.

    மேலும் அவர் கூறுகையில், மழையின் காரணமாக பாதாள சாக்கடை திட்டப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. மழைக்காலத்துக்குப் பின்பு பணிகளைப் துரிதப்படுத்தி முடிக்க ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

    Next Story
    ×