search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலம் முள்ளுவாடி 2-வது கேட்டில் போக்குவரத்து மாற்றம்
    X

    சேலம் முள்ளுவாடி 2-வது கேட்டில் போக்குவரத்து மாற்றம்

    • ரெயில்வே மேம்பால பணிக்காக சேலம் முள்ளுவாடி 2-வது கேட்டில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.
    • ரெயில்வே உயர்மட்ட மேம்பாலத்தையொட்டி இணைப்பு பாலம் சேர்க்க வேண்டும்.

    சேலம்:

    சேலம் -விருத்தாசலம் வழித்தடத்தில் தினசரி 10-க்கும் மேற்பட்ட பயணிகள் ரெயில், சரக்கு ரெயில், எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயங்கி வருகிறது. இந்த ரெயில்கள் வரும்போது முள்ளுவாடிகேட், அணைமேடு, தில்லைநகர், பொன்னம்மாப்பேட்டை, அம்மாப்பேட்டை மிலிடெரிரோடு, அயோத்தியாப்பட்டணம் உள்பட பல பகுதிகளில் கேட்டுகள் மூடப்படுகிறது.

    இவ்வாறு கேட்டுகள் மூடப்படும்போது, அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண முள்ளுவாடி 2-வது கேட்டிலும் ரெயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இதை பரிசீலித்த அரசு கடந்த 2016-ம் ஆண்டு முள்ளுவாடி 2-வது கேட்டில் மேம்பாலம் அமைக்கும் பணியை தொடங்கியது. தற்போது மேம்பாலப் பணி 80 சதவீதம் நிறைவடைந்துள்ளது. மீதமுள்ள பணிகளையும் முடிக்க நெடுஞ்சாலைத்துறை மும்முரமாக செயல்பட்டு வருகிறது.

    ரெயில்வே உயர்மட்ட மேம்பாலத்தையொட்டி இணைப்பு பாலம் சேர்க்க வேண்டும். இப்பணிக்காக முள்ளுவாடி 2-வது கேட்டில் தடுப்புகள் அமைத்து போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    பிரட்ஸ்ரோட்டில் இருந்து ஆனந்தாபாலத்திற்கு செல்லும்ரோடு தடுப்புகள் அமைத்து அடைக்கப்பட்டுள்ளது. அவ்வழியாக செல்லும் வாகனங்கள் இனிமேல் சுந்தர்லாட்ஜ் வந்து அைணமேடு வழியாக செல்லும் வகையிலும், அதேபோல் ஆனந்தாபாலம் வழியாக முள்ளுவாடிகேட்டுக்கு வரும் வாகனங்கள், டவுன் ரெயில் நிலையத்தை யொட்டி பாரதியார் சிலை ரோட்டில் சென்று திருவள்ளுவர் சிலை வழியாக செல்ல போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    Next Story
    ×