என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    • அணையின் மொத்த கொள்ளளவு 119 அடியாக உள்ள நிலையில் தற்போது நீரின் அளவு 117 அடியை எட்டி உள்ளது.
    • மழையின் காரணமாக வினாடிக்கு 3000 கன அடி நீர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.

    வேங்கிக்கால்:

    திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையில் இருந்து இன்று காலை தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் அணையின் கரையோரம் உள்ள மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    திருவண்ணாமலை மாவட்ட மக்களின் தண்ணீர் தேவை மற்றும் திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய 4 மாவட்ட விவசாயிகளின் விவசாய தேவைக்கான தண்ணீர் தேவைகளை சாத்தனூர் அணை பூர்த்தி செய்து வருகிறது.

    சாத்தனூர் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக வினாடிக்கு 3000 கன அடி நீர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.

    அணையின் மொத்த கொள்ளளவு 119 அடியாக உள்ள நிலையில் தற்போது நீரின் அளவு 117 அடியை எட்டி உள்ளது.

    அணையில் இருந்து இன்று காலை 500 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

    இதனால் 4 மாவட்டங்களின் அணையின் கரையோரம் உள்ள மக்கள் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ, கால்நடைகளை ஆற்றில் இறக்கவும் கூடாது என நீர்ப்பாசன துறை மற்றும் வருவாய் துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    அணைக்கு வரும் நீரின் அளவைப் பொறுத்து மேலும் கூடுதல் நீர் அணையில் இருந்து திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • காசாகிராண்ட், ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களிலும் இன்று 5-வது நாளாக சோதனை நடந்தது.
    • அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் தொடர் சோதனை நடந்து வருவது திருவண்ணாமலையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    வேங்கிக்கால்:

    தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவின் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

    சென்னை, திருவண்ணாமலை உள்பட எ.வ.வேலுவுக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் பாதுகாப்புடன் வருமானத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    திருவண்ணாமலையில் எ.வ.வேலுவுக்கு சொந்தமான வீடு மற்றும் கல்லூரியிலும் இன்று 5-வது நாளாக வருமான வரி சோதனை நடந்தது.

    இது தவிர காசாகிராண்ட், ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களிலும் இன்று 5-வது நாளாக சோதனை நடந்தது.

    கடந்த வெள்ளிக்கிழமை 3-ந் தேதி முதல் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது. எனினும் இதுவரை நடைபெற்ற சோதனையில் கைப்பற்றப்பட்ட முக்கிய ஆவணங்கள் குறித்து எந்த தகவலையும் வருமான வரித்துறை வெளியிடவில்லை.

    அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் தொடர் சோதனை நடந்து வருவது திருவண்ணாமலையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பொதுமக்களிடையே நெகிழ்ச்சி ஏற்படுத்தியது
    • குண்டும் குழியுமா இருந்ததால் கடும் அவதி

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அடுத்த சந்தவாசல் அரசு மேநிலைப்பள்ளி எதிரே உள்ள சாலை சேதமடைந்து கிடக்கிறது.

    ஜல்லிகள் பெயர்ந்து குண்டும் குழியுமான சாலையால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வந்தனர்.

    மேலும் இரவு நேரங்களில் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தில் விழுந்து காயங்களுடன் செல்வது தொடர்கதையாக உள்ளது.

    இந்த நிலையில் கடந்த மாதம் வேலூர் தொரப்பா டியை சேர்ந்த பெண் தனது மகனுடன் மொபட்டில் படவேடு ரேணுகாம்பாள் கோவி லுக்கு சென்று வீடு திரும்பிய போது அந்த பள்ளத்தில் விழுந்து பலத்த காயமடைந்தார்.

    ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    எனவே மீண்டும் அந்த இடத்தில் விபத்து ஏற்படாமல் இருக்க சந்தவாசல் போலீசார் நடவடிக்கை எடுத்து ள்ளனர். அதன்படி சந்தவாசல் போலீசார் சப்- இன்ஸ்பெ க்டர்கள் நாராயணன், மகேந்திரன் மற்றும் போலீசார் விபத்து நடந்த பள்ளத்தை சிமெண்டு கலவை கொண்டு சீரமை தந்தனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    • துணி துவைக்க சென்றபோது பரிதாபம்
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    ஆரணி:

    ஆரணி அருகே இரும்பேடு கிராமத்தைச் சேர்ந்த கபூர், டீக்கடையில் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஷர்மிளா (வயது 45). இவர் வீட்டின் எதிரே உள்ள இரும்பேடு பெரிய ஏரியில் துணி துவைக்க சென்றார். அப்போது ஏரியில் இறங்கியபோது தவறி உள்ளே விழுந்தார்.

    அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் உடனடியாக வந்து அவரை காப்பாற்ற முயன்றனர். அதற்குள் அவர் தண்ணீரில் மூழ்கிவிட்டார். பின்னர் ஆரணி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சுமார் ஒரு மணி நேரம் போராடி ஷர்மிளாவை பிணமாக மீட்டனர்.

    பின்னர் பிரேத பரிசோதனைக்காக ஷர்மிளாவின் உடல் ஆரணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இது குறித்து ஆரணி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மனுக்களை கொடுக்க முடியாமல் பொதுமக்கள் அவதி
    • அத்தியாவசிய பணிகளும் முடங்கும் சூழல் நிலவி வருகிறது

    புதுப்பாளையம்:

    செங்கம் அருகே உள்ள கலசப்பாக்கம் தொகுதி க்குட்பட்ட புதுப்பாளையம் பேரூராட்சி செயல்பட்டு வருகிறது. புதுப்பா ளையம் பேரூராட்சிக்குட்பட்ட 12 வார்டுகளில் சுமார் 5 ஆயரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

    கடந்த சில மாதங்களாக புதுப்பாளையம் பேரூராட்சிக்கு செயல் அலுவலர் இல்லாததால் போளூர் பேரூராட்சி செயல் அலுவலர் கூடுதல் பொறுப்பாக கவனித்து வருகிறார்.

    புதுப்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள குறைகள் மற்றும் செயல்படுத்த வேண்டிய பணிகள் குறித்து கூறவும் கோரிக்கை மனுக்களை செயல் அலுவ லரிடம் நேரில் கொடுக்க முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

    மேலும் குடிநீர், கழிவு நீர் கால்வாய் தொடர்பான புகார்கள் கொசு மருந்து அடிக்காததால் கொசு மருந்து கொசு தொல்லை அதிகரித்துள்ளது. பல்வேறு குறைகளை செயல் அலுவலரிடம் தெரிவிக்க முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

    மேலும் அரசின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்ட ங்களை செயல்படுத்துவதில் சுணக்கம், பேரூராட்சி சார்பில் செயல்படுத்தபடும் அத்தியாவசிய பணிகளும் முடங்கும் சூழல் நிலவி வருகிறது.

    வாரத்தில் குறிப்பிட்ட நாளில் மட்டும் கூடுதல் பொறுப்பாக கவனித்து வரும் செயல் அலுவலர் பேரூராட்சிக்கு வந்து சென்று விடுவதால் பொதுமக்கள் செயல் அலுவலரை நேரில் சந்திக்க முடியவில்லை.

    எனவே புதுப்பாளையம் பேரூராட்சிக்கு புதிய செயல் அலுவலரை நியமித்து பொதுமக்களின் குறைகளை உடனடியாக நிவர்த்தி செய்திட மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியிலுள்ள பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு
    • சான்றிதழ், ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டது

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அருகே ஒண்ணுபுரம் அரசு மேநிலைப்பள்ளியில் ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு பிரசார கட்டுரை போட்டி நடைபெற்றது.

    இப்போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, ஒண்ணுபுரம் கிளை மேலாளர் சுனில்குமார் கலந்து கொண்டு சான்றிதழ்கள், ரொக்கப் பரிசுகள் வழங்கினார்.

    அப்போது தலைமை ஆசிரியர் பாபு ஆசிரியர்கள் திருமால் உள்பட பலர் உடனிருந்தனர்.

    • போலீசார் ரோந்து பணியில் சிக்கினர்
    • 150 கிராம் பாக்கெட்டுகள் பறிமுதல்

    வெம்பாக்கம்:

    திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் பல்லாவரம் அம்மன் கோவில் அருகே, போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக சந்தேகிக்கும் வகையில் வந்த 3 பேரை மடக்கி பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டம், ஓரிக்கை பகுதியைச் சேர்ந்த குமார் ( வயது 22), நவாப் (19), சக்திவேல் (23) என்பதும், அவர்கள் கஞ்சா கடத்தி வந்ததும் தெரிய வந்தது.

    இதனையடுத்து 3 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 150 கிராம் கஞ்சா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

    • எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் கடந்த வெள்ளிக்கிழமை 3-ந் தேதி முதல் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
    • கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாகவும் எ.வ.வேலு வீட்டில் வருமான வரி சோதனை நடைபெற்றது.

    வேங்கிக்கால்:

    தமிழக பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை, சிறு துறைமுகங்கள் அமைச்சர் எ.வ.வேலு வீடு மற்றும் அலுவலகங்களில் இன்று தொடர்ந்து 4-வது நாளாக வருமான வரி சோதனை நடந்தது.

    சென்னை, திருவண்ணாமலையில் உள்ள அவரது வீடு, கல்லூரிகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

    எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் கடந்த வெள்ளிக்கிழமை 3-ந் தேதி முதல் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

    எனினும் இதுவரை நடைபெற்ற சோதனையில் கைப்பற்றப்பட்ட முக்கிய ஆவணங்கள் குறித்து எந்த தகவலையும் வருமான வரித்துறை வெளியிடவில்லை.

    சோதனையின் முடிவில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்த தகவலை வருமான வரித்துறை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பொதுப்பணி ஒப்பந்தாரர் வீடுகள் அலுவலகங்கள், பிரபல கட்டுமான நிறுவனங்கள், ரியல் எஸ்டேட், காசா கிராண்ட், ஆகியவற்றிலும், கரூரில் உள்ள தி.மு.க.வின் முன்னாள் எம்.எல்.ஏவான வாசுகி முருகேசன் சகோதரி பத்மா ஆகியோரின் வீடுகளிலும் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

    எனினும் அதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை. கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாகவும் எ.வ.வேலு வீட்டில் வருமான வரி சோதனை நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்தது.

    • அக்னி ஸ்தலமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் விளங்குகிறது.
    • முக்கிய விழாக்களில் கார்த்திகை தீபத்திருவிழாவும் ஒன்றாகும்.

    திருவண்ணாமலை:

    பஞ்ச பூதஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் விளங்குகிறது. இந்த கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழாவும் ஒன்றாகும். இந்த விழாவானது 10 நாட்கள் நடைபெறும்.

    இந்த ஆண்டிற்கான தீபத்திருவிழா வருகிற 17-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 26-ந்தேதி வரை நடைபெற உள்ளது. விழாவை முன்னிட்டு கோவிலில் மின்விளக்கு அலங்காரம் அமைக்கும் பணி, பந்தல் அமைக்கும் பணி, சாமி வீதி உலா செல்லும் வாகனங்கள் சீரமைக்கும் பணி, வாகனங்களுக்கு வர்ணம் பூசும் பணி, பஞ்சமூர்த்தி தேர்கள் சீரமைக்கும் பணி உள்ளிட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் நேற்று கோவிலில் தீபத்திருவிழாவை முன்னிட்டு உழவார பணிகள் நடைபெற்றது. திருப்பூரை சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட சிவனடியார்கள் இந்த உழவார பணியில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கோவிலில் உள்ள கொடிமரம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளையும் கழுவி சுத்தம் செய்வது, விளக்குகளை சுத்தம் செய்வது போன்ற பணிகளை மேற்கொண்டனர்.

    • ரோந்து பணியில் சிக்கினார்
    • 12 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து அழித்தனர்

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஏழுமலை மற்றும் போலீசார் கண்ணமங்கலம் அருகே இரும்பிலி செ லியம்மன் கோவில் அருகே ரோந்து சென்றனர்.

    அப்போது அங்கு லாரி டியூப்பில் சாராயம் பதுக்கிய வேலூர் மருதவ லிமேடு பகுதியை சேர்ந்த கோபி (வயது 23) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    மேலும் அவரிடம் இருந்து 12 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து அழித்தனர்

    • பீரோவை திறந்து நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றனர்
    • போலீசார் விசாரணை

    ஆரணி:

    ஆரணி அருகே மட்டதாரி கிராமத்தைச் சேர்ந்தவர் தாமோதரன் (வயது 48), விவசாயி. இவரது மனைவி ராணிக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டதால் கடந்த மாதம் 24-ந் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சையாக சேர்க்கப்பட்டார்.

    இதனால் தாமோதரன் விவசாய நிலத்தை கவினித்துக்கொண்டு வீட்டிற்கு சரிவர செல்லாமல் இருந்துள்ளார். ராணிக்கு சிகிச்சை முடித்து சில நாட்களுக்கு முன்பு வீட்டுக்கு வந்துள்ளனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் வீட்டின் பீரோவை திறந்து பார்க்கும் போது பீரோவில் வைத்திருந்த தங்க சங்கிலி, கம்மல், மோதிரம் உள்பட் 16 பவுன் நகைகள் திருட்டு போயிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து தாமோதரன் ஆரணி தாலுகா போலீசில் புகார்செய்தார். அதில் நான் ஊரில் இல்லாததால் கள்ளச்சாவி போட்டு பீரோவை திறந்து நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர் என்று தெரிவித்துள்ளார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 7 பேர் கைது
    • ஜெயிலில் அடைப்பு

    வேங்கிக்கால்:

    திருவண்ணாமலை சின்ன கடைத்தெரு அருகில் உள்ள வடக்கு தெருவில் வசித்து வரும் உதயகுமார் மகன் முத்து, இவர் தி.மு.க. இளைஞர் அணி நகர துணை அமைப்பாளராக உள்ளார்.

    ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். கடந்த மாதம் 30-ந் தேதி மாலை பணி நிமித்தமாக வெளியூர் சென்றுவிட்டு முத்து மற்றும் அவரது நண்பர் ராஜேஷ் ஆகியோர் வேங்கிக்கால் பகுதியில் இருந்து திருவண்ணாமலை நகரை நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர்.

    இவர்களை பின் தொடர்ந்து பைக்கில் மர்ம கும்பல் வந்தனர்.

    திடீரென முத்துவை வழிமறித்து கழுத்து, கை உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டி விட்டு தப்பிச்சென்றனர்.

    படுகாயம் அடைந்த முத்துவை வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சேர்ந்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் திவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

    இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை பரிதாபமாக இறந்தார்.

    இந்த வழக்கில் தொடர்புடைய 7 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    உயிரிழந்த முத்துவின் உடல் வைக்கப்பட்டுள்ள சின்ன கடைத்தெரு பகுதியில் அசம்பா விதங்களை தவிர்க்கும் பொருட்டு கூடுதல் போலீசார் பாதுகாப்புக்காக அங்கு குவிக்கப்ப ட்டுள்ளனர்.

    ×