என் மலர்
உள்ளூர் செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதி விவசாயி பலி
- லூா்தபுரம் அருகே சென்றபோது பின்னால் வந்த வேன் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.
- விபத்து குறித்து சேவூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து வேன் ஓட்டுநரைத் தேடி வருகின்றனா்.
திருப்பூர் :
திருப்பூர் அடுத்த அவினாசி சேவூா் அருகே மங்கரசுவலையபாளையம், லூா்துபுரத்தை சோ்ந்தவா் முருகேசன் மகன் கனகராஜ் (38), விவசாயி. இவா் தனது இருசக்கர வாகனத்தில் அதே பகுதியைச் சோ்ந்த வேலுச்சாமி (50) என்பவரை பின்னால் அமர வைத்துக் கொண்டு புளியம்பட்டியை நோக்கிச் சென்று கொண்டிருந்தாா். லூா்தபுரம் அருகே சென்றபோது பின்னால் வந்த வேன் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த இருவரும் அவிநாசி அரசு மருத்துவமனை அனுப்பிவை க்கப்பட்டனா். அங்கு வேலுச்சாமி உயிரிழந்தாா்.
மேல் சிகிச்சை க்காக கனகராஜ் திருப்பூா் அரசு மருத்துவமனை அனுப்பிவை க்கப்பட்டாா். விபத்து குறித்து சேவூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து வேன் ஓட்டுநரைத் தேடி வருகின்றனா்.
Next Story