என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  சமூக தணிக்கை குறித்த சிறப்பு கிராம சபை கூட்டம்
  X

  சமூக தணிக்கை குறித்த சிறப்பு கிராம சபை கூட்டம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சிறப்பு கிராம சபை கூட்டத்திற்கு மங்கலம் பகுதியைச் சேர்ந்த எபிசியண்ட்மணி தலைமை தாங்கினார்.
  • 150 நாட்கள் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கிராம சபைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

  மங்கலம் :

  திருப்பூர் ஒன்றியம் ,மங்கலம் ஊராட்சியில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தில் 2020-21 மற்றும் 2021-22 ஆண்டிற்கான சமூக தணிக்கை தொடர்பான சிறப்பு கிராம சபை கூட்டமானது மங்கலம்- சமுதாயநலக்கூடத்தில் நடைபெற்றது.சிறப்பு கிராம சபை கூட்டத்திற்கு மங்கலம் பகுதியைச் சேர்ந்த எபிசியண்ட்மணி தலைமை தாங்கினார்.

  மங்கலம் ஊராட்சி மன்றத்தலைவர் எஸ்.எம்.பி.மூர்த்தி முன்னிலை வகித்தார் .இதில் மங்கலம் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் தாஹாநசீர், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்நவமணி ,சமூக தணிக்கை அலுவலர் கதிரவன், மங்கலம் ஊராட்சி செயலாளர் ரமேஷ் , மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

  இந்த சிறப்பு கிராம சபை கூட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தில் 100 நாட்கள் வழங்கப்படும் வேலை நாட்களை கூடுதலாக 150 நாட்கள் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கிராம சபைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

  Next Story
  ×