search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாமளாபுரம்-மங்கலத்தில் விழிப்புணர்வு பேரணி
    X

    மங்கலத்தில் விழிப்புணர்வு பேரணி தொடக்க நிகழ்ச்சி நடைபெற்ற காட்சி.

    சாமளாபுரம்-மங்கலத்தில் விழிப்புணர்வு பேரணி

    • சாமளாபுரம் பேரூராட்சி மன்றதுணைத்தலைவர் குட்டிவரதராஜன் முன்னிலை வகித்தார்.
    • இதில் பள்ளி ஆசிரியர்களான மோகன்,ரவி,தினகரன் ,பள்ளி மாணவ,மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மங்கலம்:

    திருப்பூர் மாவட்டம்,சாமளாபுரம் பகுதியில் உள்ள அருள்மிகு வாழைத்தோட்டத்து அய்யன்கோவில் மேல்நிலைப்பள்ளி சார்பில் தூய்மைக்கான மக்கள் இயக்கம் என்ற திட்டத்தின் கீழ் "என் குப்பை எனது பொறுப்பு" -என்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. என் குப்பை எனது பொறுப்பு என்ற விழிப்புணர்வு பேரணியில் பள்ளி மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த பேரணிக்கு அருள்மிகு வாழைத்தோட்டத்து அய்யன்கோவில் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் செல்வகுமார் தலைமை தாங்கினார்.விழிப்புணர்வு பேரணியை சாமளாபுரம் பேரூராட்சி மன்றத்தலைவர் விநாயகா பழனிச்சாமி கொடியசைத்து துவங்கிவைத்தார். சாமளாபுரம் பேரூராட்சி மன்றதுணைத்தலைவர் குட்டிவரதராஜன் முன்னிலை வகித்தார்.

    இந்த பேரணியில் "பொதுமக்கள் குப்பைகளை தரம் பிரித்து தூய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும், பொது இடங்களில் குப்பை கொட்டக்கூடாது,என் குப்பை எனது பொறுப்பு" உள்ளிட்ட கழஷங்களை எழுப்பினார்கள்.இந்த பேரணியானது பள்ளியில் துவங்கி சாமளாபுரம் பகுதியில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக வந்து பின்னர் மீண்டும் பள்ளியில் நிறைவடைந்தது. இதில் பள்ளி ஆசிரியர்களான மோகன்,ரவி,தினகரன் ,பள்ளி மாணவ,மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதே போல திருப்பூர் மாவட்டம்,மங்கலம் ஊராட்சிக்குட்பட்ட அரசு மேல்நிலைப்பள்ளியில், நெகழி ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணிக்கு மங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை கணேஸ்வரி தலைமை தாங்கினார். பேரணியை மங்கலம் ஊராட்சி மன்றத்தலைவர் எஸ்.எம்.பி.மூர்த்தி கொடியசைத்து துவக்கி வைத்தார்.இந்த பேரணியில் மாணவ,மாணவிகள் நெகழி இதில் மங்கலம் ஊராட்சி மன்ற துணைதலைவர் தாஹாநசீர், மங்கலம் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் ராபியத்துல் பசிரி அபுதாஹிர், முகமது இத்ரிஸ், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் கட்சியை சேர்ந்த நிஷாந்த், பள்ளி ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×