என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  திருப்பூர் எம்.ஜி.ஆர். நகரில் நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்ட 70 வீடுகள் அகற்றம்
  X

  திருப்பூர் எம்.ஜி.ஆர். நகரில் நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்ட 70 வீடுகள் அகற்றம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • நீர் நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடங்களை அகற்ற வேண்டுமென கோர்ட்டு உத்தரவிட்டது.
  • திருப்பூர் மாநகரில் கடந்த சில மாதங்களாக இப்பணிகள் நடைபெற்று வருகிறது.

  திருப்பூர்:

  நீர் நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடங்களை அகற்ற வேண்டுமென கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து தமிழகம் முழுவதும் அனைத்து இடங்களிலும் நீர் நிலை ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றப்பட்டு வருகிறது.

  திருப்பூர் மாநகரில் கடந்த சில மாதங்களாக இப்பணிகள் நடைபெற்று வருகிறது. இருப்பினும் சில இடங்களில் அகற்றப்படாமல் இருந்தது. அதனை அகற்ற வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர். கோர்ட்டும் உத்தரவிட்டது.

  இதையடுத்து திருப்பூர் மாநகரில் மீண்டும் நீர் நிலை ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட தொடங்கி உள்ளனர்.

  திருப்பூர் எம்.ஜி.ஆர்.நகர் பகுதியில் நீர் நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 69 வீடுகளை அகற்றும் பணி இன்று நடைபெற்றது. மாநகராட்சி பணியாளர்கள் பொக்லைன் எந்திரங்கள் மூலம் வீடுகளை இடித்து அகற்றினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு வசித்து வந்த பொதுமக்கள்தங்களுக்கு குடியிருக்க மாற்று இடம் கேட்டு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர். முன்னதாக வீடுகளில் இருந்த பொருட்களை பொதுமக்கள் அகற்றி மாற்று இடங்களில் வைத்தனர். பொக்லைன் எந்திரம் மூலம் வீடுகள் இடிக்கப்பட்டதை படத்தில் காணலாம்.

  Next Story
  ×