search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பள்ளி மாணவர்களுக்கு பருவத்தேர்வு தொடக்கம்
    X

    கோப்புபடம்.

    பள்ளி மாணவர்களுக்கு பருவத்தேர்வு தொடக்கம்

    • நடப்பு கல்வியாண்டில் வழக்கம்போல பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.
    • 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் இடைப்பருவத்தேர்வு துவங்கியது.

    திருப்பூர் :

    கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பள்ளிகள் முழுமையாக மூடப்பட்டன. தொற்று பாதிப்பு முற்றிலும் குறைந்ததால் நடப்பு கல்வியாண்டில் இருந்து, வழக்கம்போல பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.அதற்கேற்ப பாட வகுப்புகள், விளையாட்டு, தேர்வு உள்ளிட்டவை முறையாக பின்பற்றப்பட்டு வருகின்றன. அவ்வகையில் உடுமலை கல்வி மாவட்டத்தில் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் இடைப்பருவத்தேர்வு துவங்கியது.

    அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்கள், ஆர்வத்துடன் தேர்வு எழுதினர்.இது குறித்து பள்ளித்தலைமையாசிரியர்கள் கூறியதாவது:-

    மாணவர்களுக்கு பொதுத்தேர்வு குறித்த பயத்தை நீக்க, பருவத்தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி முதல் இடை பருவத்தேர்வுக்கு மாவட்ட அளவில் ஒரே மாதிரியான வினாத்தாள் தயாரிக்கப்பட்டுள்ளது.10-ம் வகுப்பு மாணவர்களுக்கு காலை 11:15 மணி முதல் 12:45 மணி, மதியம்3மணி முதல் 4:30 மணி வரை தேர்வு நடத்தப்படுகிறது.28-ந்தேதி கணக்கு மற்றும் தமிழ் பாடத்தேர்வு எழுதினர். 29-ந்தேதி அறிவியல் மற்றும் ஆங்கிலம் தேர்வு எழுதினர்.

    1-ந்தேதி சமூக அறிவியல் தேர்வு நடத்தப்படுகிறது. இதேபோல 28-ந்தேதி 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள், கணிதம், தாவரவியல், வணிகவியல், ஆங்கிலம் தேர்வு எழுதினர்.29-ந்தேதி இயற்பியல், வர்த்தகம், கம்ப்யூட்டர் சயின்ஸ், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ், கம்ப்யூட்டர் டெக்னாலஜி, புள்ளியியல் தேர்வு எழுதினர்.

    1-ந்தேதி புவியியல், விலங்கியல், வணிகக்கணிதம் மற்றும் புள்ளியியல், வரலாறு மற்றும் தமிழ்த்தேர்வு 2-ந்தேதி இயற்பியல் மற்றும் கணக்குப்பதிவியல் தேர்வும் நடத்தப்படுகிறது.மேலும் 6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு 2-ந்தேதி தொடங்கும் தேர்வு 5ந் தேதி முடிவடையும். இவர்களுக்கான வினாத்தாள் அந்தந்த பள்ளி அளவிலேயே தயாரிக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×