search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நவராத்திரியையொட்டி கண்ணை கவரும் கொலு  பொம்மைகள் விற்பனை
    X

     விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள கொலு பொம்மைகளை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்க்கும் காட்சி.

    நவராத்திரியையொட்டி கண்ணை கவரும் கொலு பொம்மைகள் விற்பனை

    • நவராத்திரியின் 9 நாட்களிலும் வீட்டில் கொலு வைத்து வழிபடுவதை பின்பற்றி வருகின்றனர்.
    • மதுரையில் தயாரிக்கப்பட்ட கொலு பொம்மைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

    திருப்பூர் :

    அம்மன் அவதாரங்களை வழிபடும் நவராத்திரி திருவிழா நாடு முழுவதும் மற்றும் தமிழகத்தில், நவராத்திரியின் 9வது நாளில் சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜையும் கொண்டாடப்படுகிறது. 10வது நாளில் விஜயதசமி பூஜை குதூகலமாக கொண்டாடப்படுகிறது.

    நவராத்திரியின் 9 நாட்களிலும் வீட்டில் கொலு வைத்து தினமும் ஒரு பதார்த்தம் படைத்து, பஜனையுடன் வழிபடுவதை பலரும் பின்பற்றி வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் புதிய கொலு பொம்மைகள் வாங்கி, வீட்டில் கொலு வைக்கின்றனர்.பல்வேறு கடைகளில் கொலு பொம்மைகள் விற்பனைக்கு வந்துள்ளன. தமிழ்நாடு சர்வோதய சங்கம் சார்பில் மதுரையில் தயாரிக்கப்பட்ட கொலு பொம்மைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள சர்வோதய சங்க ேஷாரூமில், கொலு பொம்மை விற்பனை துவங்கியுள்ளது.விநாயகர், சிவன், விஷ்ணு, அம்பாள், முருகன் சுவாமி சிலைகள், இந்துக்களின் பண்டிகைகளை விவரிக்கும் குரூப் பொம்மைகள், பழங்கள், காய்கறிகள் போன்ற பொம்மைகள், குழந்தை கிருஷ்ணர் பொம்மை, திருமணம், வளைகாப்பு, காதணி விழா நிகழ்வு பொம்மைகள், காமதேனு, சிவன் - நந்தி, குழந்தைகள், குழந்தை விநாயகர் என பல்வேறு வகையான பொம்மைகளும் அணிவகுத்துள்ளன.

    சர்வோதய சங்க நிர்வாகிகள் கூறுகையில், நவராத்திரி விழாவையொட்டி மதுரையில் தயாரிக்கப்பட்ட கொலு பொம்மைகள் விற்பனைக்கு வந்துள்ளன. சிறிய சிலைகள், 25 ரூபாய் முதல் 7,700 ரூபாய் மதிப்புள்ள பெரிய சிலைகள் வரை விற்பனைக்கு வந்துள்ளன. நவராத்திரி விழாவை பாரம்பரிய முறைப்படி கொண்டாடி மகிழவும், கொலு வைக்கவும் தரமான கொலு பொம்மைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன என்றனர்.

    Next Story
    ×