search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விசைத்தறிகளுக்கு மின் கட்டண குறைப்பு செய்யப்படும் - கொங்கு ஈஸ்வரன் எம்.எல்.ஏ., பேட்டி
    X

    விசைத்தறிகளுக்கு மின் கட்டண குறைப்பு செய்யப்படும் - கொங்கு ஈஸ்வரன் எம்.எல்.ஏ., பேட்டி

    • விசைத்தறி தொழிலை பாதுகாக்கும் வகையில் விசைத்தறிகளுக்கு மின் கட்டண குறைப்பு செய்யப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.
    • பொதுசுத்திகரிப்பு நிலைய நிர்வாகிகள் சாமிநாதன், வி்ஸ்வநாதன், ராமசாமி,ராமமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள கரைப்புதூர் கிராமத்தில் மாவட்ட கவுன்சிலர் நிதி ரூ.30 லட்சத்தில் லட்சுமி நகர் முதல் வாழைத்தோட்டம் வரையிலான பகுதியில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை விழா மாவட்ட கவுன்சிலர் கரைப்புதூர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. இந்த பணியை கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் எம்.எல்.ஏ., தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் பேசுகையில், விசைத்தறி தொழில் இன்றைய நிலை என்ன என்பது எனக்கு நன்றாக தெரியும்.நானும் விசைத்தறி ஜவுளி உற்பத்தி தொழில் தான் செய்து வருகிறேன். அதனால் தான் விசைத்தறியாளர்களை அழைத்து கொண்டு முதல்வர் ஸ்டாலினை சந்தித்து விசைத்தறி தொழிலில் உள்ள இன்றைய நிலை என்ன என்பதை தெளிவாக எடுத்துரைத்தோம்.

    அதனை கேட்ட முதல்வர் ஸ்டாலின் விசைத்தறி தொழிலை பாதுகாக்கும் வகையில் விசைத்தறிகளுக்கு மின் கட்டண குறைப்பு செய்யப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.அந்த அறிவிப்பு விரைவில் வெளியியாகும். இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் ஊராட்சி ஒன்றிய குழு துணைத்தலைவர் பாலசுப்பிரமணியம், ஒன்றிய கவுன்சிலர் ரவி, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் தண்ணீர்பந்தல் நடராஜன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மாவட்ட நிர்வாகிகள் ராமசாமி, ஆறாக்குளம் சுப்பிரமணியம், பொதுசுத்திகரிப்பு நிலைய நிர்வாகிகள் சாமிநாதன், வி்ஸ்வநாதன், ராமசாமி,ராமமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×