என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  பல்லடத்தில் திருட்டு வழக்குகளில் 3 பேர் கைது
  X

  கோப்புபடம்.

  பல்லடத்தில் திருட்டு வழக்குகளில் 3 பேர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பருவாய் ரோட்டில் பல்லடம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
  • 3 பேர் போலீசாரை கண்டவுடன், அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.

  பல்லடம் :

  பல்லடம் அருகேயுள்ள காரணம்பேட்டை- பருவாய் ரோட்டில் பல்லடம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியே சென்ற வாலிபர்கள், 3 பேர் போலீசாரை கண்டவுடன், அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். அவர்களை துரத்திச் சென்று வளைத்துப் பிடித்த போலீசார் பல்லடம் போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்தபோது, அவர்கள் சிவகங்கையை சேர்ந்த தமிழ்ச்செல்வன் மகன் பிரபுதேவா(வயது 27), சூலூர் ஈஸ்வரன் கோவில் வீதியைச் சேர்ந்த சுப்பிரமணி மகன் சந்தோஷ் குமார்(19), சூலூர்அருகே உள்ள கரவழி மாதப்பூர் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியம் மகன் உதயகுமார்,(24)என்பது தெரியவந்தது.

  விசாரணைவிசாரணைஇவர்கள் பல்லடம் அருகே உள்ள கணபதிபாளையம் குறிஞ்சி நகரில் வீட்டின் பூட்டை உடைத்து திருடிய வழக்கிலும், பொன்நகர் பகுதியில் 2 வீடுகளின் பூட்டை உடைத்து திருடிய வழக்கிலும், உள்ளிட்ட 4 திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்டு இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 10 பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்து,பல்லடம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை சிறையில் அடைத்தனர்.

  Next Story
  ×