என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  குறைந்த மார்க்கு வரும் என்ற அச்சத்தில் மாணவி தற்கொலை
  X

  கோப்புப்படம்

  குறைந்த மார்க்கு வரும் என்ற அச்சத்தில் மாணவி தற்கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பிளஸ்-2 தேர்வு முடிவு வருவதற்கு முன்பே விபரீத முடிவு.
  • போலீசார் விசாரணை.

  வாணியம்பாடி:

  திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் அடுத்த நாயக்கனூர் ஊராட்சிக்கு உட்பட்ட கொல்லக்கொட்டாய் பகுதியை சேர்ந்த அறிவழகன் என்பவரின் மகள் ரூபாஸ்ரீ (வயது17). தனியார் பள்ளியில் படித்த இவர் 12 ம் வகுப்பு தேர்வு எழுதிவிட்டு தேர்வு முடிவுகளுக்காக காத்திருந்த நிலையில், வீட்டில் பெற்றோர்களிடம் தேர்வு சரியாக எழுதாத காரணத்தினால் மதிப்பெண்கள் மிகவும் குறைவாக வரும் மற்றும் தேர்வில் நான் தேர்ச்சி பெறுவது சந்தேகம் என்று தொடர்ச்சியாக கூறி வந்துள்ளார்.

  இந்த நிலையில், நேற்று மாலை முதல் ரூபாஸ்ரீ காணவில்லை என்றும், வீட்டின் அருகே உள்ள கிணற்றில் நேற்று இரவு பலத்த சத்தம் கேட்டதாகவும் பெற்றோர் தெரிவித்ததன் பேரில், சந்தேகமடைந்த அப்பகுதியினர் காவலூர் போலீசார் மற்றும் ஆலங்காயம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் அப்பகுதிக்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் கிணற்றில் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

  அப்போது கிணற்றில் ரூபாஸ்ரீ பிணமாக இருப்பதைக் கண்டறிந்த தீயணைப்புத்துறையினர் உடலை மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

  சம்பவம் குறித்து காவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் மாணவி தேர்வு முடிவு வெளியாகின்ற அச்சத்தினால் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.

  இந்நிலையில் நேற்று காலை 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் தற்கொலை செய்து கொண்ட ரூபாஸ்ரீ 344 மதிப்பெண்கள் பெற்று தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பது அப்பகுதி யினரிடையே மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

  Next Story
  ×