என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  மகாசக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
  X

  மகாசக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது
  • பெண்களுக்கு சாமி வந்து ஆடினார்கள்

  திருப்பத்தூர்:

  திருப்பத்தூர் தாலுகா ஆதியூர் கிராமம் வேடியப்பன் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ மகா சக்தி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

  இதில் ஸ்ரீ விக்னேஸ்வர பூஜை, மாரியம்மன் கரிக்கோலம், மகா கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, முதல் கால பூஜை யாகசாலை பூஜைகள், பூர்ணஹூதி தீபாராதனை, தொடர்ந்து இரண்டாம் கால பூஜை தம்பதிகள் சங்கல்பம் நடந்தது.

  முக்கிய நிகழ்வாக மகா சக்தி மாரியம்மன் மீது புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது பெண்களுக்கு சாமி வந்து ஆடினார்கள்.

  நிகழ்ச்சியில் நல்லதம்பி எம்எல்ஏ, கந்திலி ஒன்றிய குழு தலைவர் திருமதி, ஒன்றிய செயலாளர் வக்கீல் கே. ஏ.குணசேகரன்ண, ஆதியூர் ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தகுமார் துணைத்தலைவர் பழனிவேல், சக்கரவர்த்தி, ஆகியோர் கலந்து கொண்டனர்.

  கும்பாபிஷேக நிகழ்ச்சிகளை கோவில் பரம்பரை தர்மகர்த்தார்கள் எஸ்..ஹரி கிருஷ்ணன் எஸ் ஜெகதீசன் ஆர். ராஜா மற்றும் நிர்வாக குழுவினர் செய்திருந்தனர்.

  Next Story
  ×