search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பா.ஜ.க. செயற்குழு கூட்டம்
    X

    திருப்பத்தூர் நகர பா.ஜ.க. செயற்குழு கூட்டம் நடந்த காட்சி.

    பா.ஜ.க. செயற்குழு கூட்டம்

    • கஞ்சா விற்பனையை தடுக்க வலியுறுத்தல்
    • பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் நகர பாரதிய ஜனதா கட்சி செயற்குழு கூட்டம் திருப்பத்தூர் ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு நகர தலைவர் சண்முகம் தலைமை வகித்தார், மாவட்டத் துணைச் செயலாளர் வக்கீல் அன்பழகன் முன்னிலை வகித்தார், அனைவரையும் பொதுச் செயலாளர் சரவணன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் சி.வாசுதேவன், மாநிலச் செயலாளர் கொ. வெங்கடேசன் கலந்து கொண்டு பேசினார்கள்.

    கூட்டத்தில் முன்னாள் நகரத் தலைவர் அருள்மொழி, மாநில செயற்குழு உறுப்பினர் ராஜேஷ்குமார், பொதுச் செயலாளர் ஈஸ்வர், கவியரசு, உட்பட ஏராளமான கலந்து கொண்டனர். இறுதியில் பொதுச் செயலாளர் டிவி பார்த்திபன் நன்றி கூறினார். கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட விவரம் வருமாறு;-

    திருப்பத்தூர் நகராட்சி குடி தண்ணீர் எந்தெந்த நேரங்களில் விடுகிறார்கள் என்று பொதுமக்களுக்கு தெரியவில்லை. ஆகவே திருப்பத்தூரில் அனைத்து வாடுகளில் எந்தெந்த நாட்களில் குடிநீர் வழங்கப்படுகிறது என்பதை அட்டவணை வெளியிட வேண்டும், ஆலங்காயம் ரோடில் உள்ள நகைக்கடை பஜாரில் பொதுமக்கள் அதிக அளவில் வருவதால் அந்தப் பகுதியில் கழிப்பறை இல்லாததால் அந்த இடத்தில் பொதுமக்களுக்கு கழிப்பிட வசதி செய்து தர வேண்டும், திருப்பத்தூர் நகரத்தில் சாராயம் கஞ்சா குட்கா போன்றவை அதிக அளவில் உள்ளது செல்போனில் கூறினால் எடுத்து வந்து கொடுக்கிறார்கள்.

    இதுதான் பள்ளி மாணவர்கள் இளைஞர்கள் பாதிக்கப்படுகிறார்கள் இதை கட்டுப்படுத்த போலீசார் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    ஜோலார்பேட்டையில் நகர பாஜக செயற்குழு கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் அணி பிரிவு தலைவர்கள் அறிமுக கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.

    இந்த செயற்குழு கூட்டத்திற்கு நகரத் தலைவர் லோகநாதன் தலைமை தாங்கினார். நகரத் துணைத் தலைவர்கள் அறிவுச்சுடர், சௌந்தர்ராஜன், நகர பொதுச்செயலாளர்கள் ராஜேந்திரன், விவேகானந்தன் ஆகியோர் முன்னில வகித்தனர். மேலும் இந்த செயற்குழுக் கூட்டத்தில் மாநில செயலாளர் கொ. வெங்கடேசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் சி. வாசுதேவன், விவசாய அணியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே. கே. மணி, மாவட்ட பொதுச்செயலாளர் சி. கவியரசு ஆகியோர் பேசினர்.

    இதனைத் தொடர்ந்து புதிதாக தேர்வு செய்யப்பட்ட பிற அணி நிர்வாகிகளுக்கு சால்வை அணிவிக்கப்பட்டது. மேலும் இந்த செயற்குழு கூட்டத்தில் மாவட்ட துணைத் தலைவர் ஐஸ்வர்யா, மாவட்ட ஊடகப் பிரிவு தலைவர் வா. கி. அருணா, மாவட்டத் துணைத் தலைவர் முன்னாள் ராணுவ பிரிவு கே. அருள், மாவட்ட விருந்தோம்பல் பிரிவு தலைவர் ரஞ்சித் உள்ளிட்ட மாவட்ட, நகர, பிராணி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இறுதியில் நகர இளைஞரணி தலைவர் ஆசைமுத்து நன்றி கூறினார்.

    Next Story
    ×