என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  448 பேருக்கு கிடாய் விருந்துடன் அன்னதானம்
  X

  விஜய் இளைஞரணி சார்பாக  மாணவ,  மாணவிகளுக்கு உதவிகள் வழங்கிய காட்சி

  448 பேருக்கு கிடாய் விருந்துடன் அன்னதானம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • திருப்பத்தூர் விஜய் இளைஞரணி சார்பாக வழங்கினர்
  • மாணவ, மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கினார்கள்

  திருப்பத்தூர்:

  நடிகர் விஜய் 48வது பிறந்தநாளை முன்னிட்டு திருப்பத்தூர் மாவட்ட இளைஞரணி தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் திருப்பத்தூர் மாவட்ட இளைஞரணி தலைவர் வி.நவீன்குமார் தலைமையில் திருப்பத்தூர் முனீஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு பூஜை மற்றும் கிடாய் விருந்துடன் 448 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

  இதை தொடர்ந்து கந்திலி மேற்கு ஒன்றிய இளைஞரணி சார்பாக காக்கங்கரை பஸ் நிறுத்தத்தில் இனிப்புகள் வழங்கி 250 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

  தொடர்ந்து கந்திலி வடக்கு ஒன்றியம் இளைஞரணி தலைமை சார்பாக ரத்ததானம் முகாம் நடந்தது. இதில் 148 பேர் ரத்ததானம் வழங்கினார்கள், 7 புதிய கிளைகள் மன்றம் பெயர் பலகைகள் திறந்து வைக்கப்பட்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இனிப்புகள் மற்றும் நோட்டு புத்தகங்கள் வழங்கினார்கள்

  நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞரணி செயலாளர் அருண்,துணை தலைவர் சரவணன், பொருளாளர் கோகுல்,துணை செயலாளர் பிரபு,இணை செயலாளர்கள் ராஜேஷ்,பாஸ்கர் மற்றும் நகர இளைஞரணி, ஒன்றிய இளைஞரணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

  Next Story
  ×