search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பள்ளியில் முப்பெரும் விழா
    X

    விழாவில் அண்ணாதுரை எம்.எல்.ஏ. பேசினார்.

    பள்ளியில் முப்பெரும் விழா

    • கல்வி புரவலர்களுக்கான கல்வெட்டை திறந்து வைத்து காமராஜரின் வாழ்க்கை வரலாறு குறித்து சிறப்புரை ஆற்றினார்.
    • பள்ளியில் புரவலர் நன்கொடை செய்தவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    மதுக்கூர்:

    மதுக்கூர் ஒன்றியம் காடந்தகுடி ஊராட்சியில் உள்ள கோட்டைக்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் காமராஜரின் பிறந்தநாள் விழா கல்வி வளர்ச்சி நாள், கல்வி புலவர்களுக்கான கல்வெட்டு திறப்பு மற்றும் இலக்கிய மன்ற விழா என முப்பெரும் விழா நடைபெற்றது.

    இந்த விழாவிற்கு வட்டார கல்வி அலுவலர் மனோகரன் தலைமை தாங்கினார். பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மற்றும் காடந்தகுடி ஊராட்சி மன்ற தலைவருமான இந்திரா நடராஜன் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியை வாசுகி வரவேற்றார். சொக்கனாவூர் பெற்றோர் ஆசிரியர் தலைவரும், மதுக்கூர் கிழக்கு ஒன்றிய தி.மு.க செயலாளருமான இளங்கோ, வட்டார மேற்பார்வையாளர் தங்கம், வீரப்பராஜா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

    நிகழ்ச்சியில் அண்ணா துரை எம்.எல்.ஏ. கல்வி புரவலர்களுக்கான கல்வெட்டை திறந்து வைத்து காமராஜரின் வாழ்க்கை வரலாறு பற்றி சிறப்புரை ஆற்றினார். இதையடுத்து பள்ளியில் புரவலர் நன்கொடை செய்தவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. முடிவில் ஆசிரியர் ஹெலன் அற்புதமேரி நன்றி கூறினார். இதில் சிரமேல்குடி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் முத்து வீரையன், விக்ரமம் முன்னாள் கூட்டுறவு வங்கி தலைவர் பழனியப்பன், காரப்பங்காடு ஊராட்சி மன்ற தலைவர் பெருமாள் மற்றும் பெற்றோர்கள் மாணவ- மாணவிகள், ஆசிரிய- ஆசிரியைகள் என பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×