என் மலர்
உள்ளூர் செய்திகள்

கார் மரத்தில் மோதி தி.மு.க. பிரமுகர் பலி
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
- திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை
சேத்துப்பட்டு:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த செம்பூரை சேர்ந்தவர் பிச்சைக்கண்ணு (வயது 56). தி.மு.க. வடக்கு மாவட்ட தொழிலாளர் அணி செயலாளராக உள்ளார்.
இவர் நேற்று வேலை சம்பந்தமாக திருவண்ணாமலைக்கு காரை ஓட்டி சென்றார். வேலைகள் முடிந்து வந்தவாசி நோக்கி வந்து கொண்டிருந்தார். சேத்துப்பட்டு அடுத்த கோழி புலியூர் அருகே வரும்போது கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. அப்போது சாலையோரம் உள்ள புளிய மரத்தில் மோதி கார் அருகே உள்ள நிலத்தில் பாய்ந்தது.
இதில் பிச்சைக்கண்ணு பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அந்த வழியாக சென்றவர்கள் தேசூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பிச்சைக்கண்ணு உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






