search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதாரப் பதியில்  நாளை ஆடித்திருவிழா தேரோட்டம்
    X

    9-ம் திருவிழாவான நேற்று மாலையில் அய்யா வைகுண்டர் ஆஞ்சநேயர் வாகனத்தில் எழுந்தருளி பதியைச் சுற்றி பவனி வந்தபோது எடுத்த படம்.




    திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதாரப் பதியில் நாளை ஆடித்திருவிழா தேரோட்டம்

    • ஆடி திருவிழா கடந்த 22-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
    • அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நாளை தேரோட்டத்தை வடம் பிடித்து தொடங்கி வைக்கிறார்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் கடற்கரையில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதாரப் பதியில் ஆடி திருவிழா கடந்த 22-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    9-ம் திருவிழாவான நேற்று மாலையில் அய்யா வைகுண்டர் ஆஞ்சநேயர் வாகனத்தில் எழுந்தருளி பதியைச் சுற்றி பவனி வருதல் நடைபெற்றது.

    10-ம் திருவிழாவான இன்று காலையில் உகப்படிப்பு, பணிவிடை, பால் அன்னதர்மம் மதியம் உச்சிப்படிப்பு, பணிவிடை அன்னதர்மம் நடைபெற்றது. மாலையில் அய்யா வைகுண்டர் இந்திர வாகனத்தில் எழுந்தருளி பதியைச்சுற்றி பவனி வருகிறார்.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான 11-ம் திருவிழாவான நாளை பகல் 12.05 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. தேரோட்டத்தை தமிழக மீன்வளம், மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வடம் பிடித்து தொடங்கி வைக்கிறார். நள்ளிரவு அய்யா வைகுண்டர் காளை வாகனத்தில் பவனியும் நடக்கிறது.

    நேற்று நடைபெற்ற ஆஞ்சநேயர் வாகன பவனியில் அய்யாவழி அகிலத் திருக் குடும்ப மக்கள் செயலாளர் பொன்னுதுரை, துணைத் தலைவர் அய்யாபழம், இணைச் செயலாளர்கள் ராதாகிருஷ்ணன், செல்வின் நிர்வாக குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன், உறுப்பினர்கள், அழகேசன், கண்ணன், வினோத், குணா, மற்றும் கார்த்திகேயன் குடும்பத்தினர் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×