என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  போர் நினைவு சின்னம் அருகே பெண் கவுன்சிலரிடம் செயின் பறித்த கொள்ளையர்கள் கைது
  X

  போர் நினைவு சின்னம் அருகே பெண் கவுன்சிலரிடம் செயின் பறித்த கொள்ளையர்கள் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சென்னை போர் நினைவு சின்னம் அருகே கவுன்சிலர் சரஸ்வதி நடந்து சென்று கொண்டிருந்தார்.
  • மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் சரஸ்வதியின் கழுத்தில் கிடந்த 3½ பவுன் செயினை பறித்துவிட்டு தப்பிச் சென்றனர்.

  சென்னை:

  சென்னை போர் நினைவு சின்னம் அருகே கவுன்சிலர் சரஸ்வதி நடந்து சென்று கொண்டிருந்தார்.

  அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் சரஸ்வதியின் கழுத்தில் கிடந்த 3½ பவுன் செயினை பறித்துவிட்டு தப்பிச் சென்றனர்.

  இருவரும் 'மழை கோட்' அணிந்திருந்தனர். இது தொடர்பாக கோட்டை காவல் நிலையத்தில் சரஸ்வதி புகார் அளித்தார். இதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

  அப்போது தண்டையார்பேட்டையை சேர்ந்த அப்துல் ஜாபர் என்ற வாலிபர் 17 வயது சிறுவனுடன் சேர்ந்து செயின் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. ஜாபர் சேட் காதலியுடன் ஊர் சுற்றுவதற்காக கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.

  இதைத் தொடர்ந்து இருவரையும் கைது செய்த போலீசார் சிறுவனை சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர். ஜாபர் சேட்டை சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் இருந்து சிறுவன் தப்பி ஓடியுள்ளான். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

  Next Story
  ×