என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  தேனி ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம்
  X

  ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்.

  தேனி ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தேனி ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் ஒன்றியக்குழு தலைவர் தலைமையில் நடைபெற்றது.
  • ஒன்றிய கவுன்சிலர்களின் கோரிக்கை குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தலைவர் கூறினார்.

  தேனி:

  தேனி ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் ஒன்றியக்குழு தலைவர் சக்கரவர்த்தி தலைமையில் நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவிச்சந்திரன், ஐயப்பன் (கிராம ஊராட்சி) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

  கூட்டத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (நிர்வாகம்) சேது, பொறியாளர்கள் சோனா, அஜய், ஒன்றிய கவுன்சிலர்கள் கிருஷ்ணசாமி, கந்தவேல், சங்கீதா, மாலா, கவிதா, தனலட்சுமி, நாகலட்சுமி, அன்புமணி உள்பட ஒன்றிய அலுவலக அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் 31 கூட்டப்பொருள் விவாதிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

  கவுன்சிலர் கிருஷ்ணசாமி:- தர்மாபுரி ஊராட்சியில் தலைவராக ஊராட்சி தலைவரின் கணவர் தான் செயல்படுகிறார். அதுபோல தர்மபுரியில் உள்ள ஓடை பகுதியில் சாலை அமைக்கும் பணி நடைபெறுகிறது இதற்கு அவர்களுக்கு யார் அனுமதி கொடுத்தது.

  மேலும் ஊராட்சி பகுதியில் சீராக குடிநீர் வரவில்லை, சாக்கடைகள் தூர்வா படுவதில்லை போன்ற அடிப்படை பிரச்சனைகள் தொடர்ந்து இருந்து வருகிறது.

  கவுன்சிலர் கவிதா:- காட்டுநாயக்கன்பட்டி ஊராட்சி அலுவலகம் அருகே உள்ள ஊரணி பயனற்றது கிடைக்கிறது அதனை சீர்படுத்த வேண்டும். மேலும் தெருவிளக்குகள் சரிவர எரிவதில்லை.

  கவுன்சிலர் சங்கீதா:- ஸ்ரீரெங்கபுரம் ஊராட்சி பகுதியில் பயணிகள் நிழற்குடை தேவை. அதுபோல ஒன்றிய கவுன்சிலருக்கு சம்பளம் தேவை என பலமுறை கூட்டத்தில் கோரிக்கை வைத்துள்ளேன். ஆனால் அரசு அமர்வுபடியை மட்டும் 10 மடங்கு உயர்த்தி உள்ளது இந்த அமர்வு படி உயர்வு என்பது வெறும் கண்துடைப்பாக உள்ளது.

  கவுன்சிலர் மாலா:- கோட்டூர் 4-வது வார்டு பகுதியில் சாலைகள் மிகவும் மோசமாக உள்ளது அதை சீர்படுத்தி சாக்கடை வசதி செய்து தர வேண்டும். அதுபோல 12-வது பகுதியில் விளையாட்டு மைதானம் அமைத்து தர வேண்டும்.

  கவுன்சிலர் கந்தவேல்:- எனது வார்டு பகுதியில் உள்ள தனியார் கல்லூரி முன்பு இருக்கக்கூடிய வாய்க்கால் புறம்போக்கு பகுதியை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர் அதனை மீட்க வேண்டும். அதுபோல கோட்டைப்பட்டி பகுதியில் ரேசன் கடை அமைத்து தர வேண்டும்.

  கவுன்சிலர் அன்புமணி:- உப்பாரப்பட்டி பகுதியில் அங்கன்வாடி மையம் இடிந்து விழும் நிலையில் உள்ளது அதனை சரி செய்ய வேண்டும். மேலும் ஆண்கள் கழிப்பிடம் கட்டி தர வேண்டும். இவ்வாறு கவுன்சிலர்கள் கோரிக்கை குறித்து கேள்விகளை எழுப்பினார்கள். இதற்கு ஒன்றிய குழு தலைவர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஒன்றிய கவுன்சிலர்களின் கோரிக்கை குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பதில் அளித்தனர்.

  Next Story
  ×