என் மலர்
உள்ளூர் செய்திகள்

கொலை மிரட்டல் விடுவதாக விவசாயி மீது ஊராட்சி தலைவர் புகார்
- ராசிபுரம் ஊராட்சியில் கொலை மிரட்டல் விடுவதாக விவசாயி மீது ஊராட்சி தலைவர் பழனிவேல் ராசிபுரம் போலீசில் புகார் அளித்தார்.
- போலீசார் இதுபற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ராசிபுரம்:
ராசிபுரம் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்தது சந்திரசேகரபுரம் ஊராட்சி. இந்த ஊராட்சியின் தலைவராக பழனிவேல் என்பவர் இருந்து வருகிறார். அதே ஊராட்சி பகுதியைச் சேர்ந்த விவசாயி பழனிவேல் என்பவர் வீட்டுக்கு தனிநபர் குடிநீர் இணைப்பு கேட்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து கோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது. இதனால் தற்போது குடிநீர் இணைப்பு தர இயலாது என ஊராட்சி மன்ற தலைவர் பழனிவேல் கூறினார்.
இந்த நிலையில் விவசாயி பழனிவேல் வயது (39), அவரது அண்ணன் சந்திரசேகரன் (42) இருவரும் ஊராட்சி மன்ற தலைவர் பழனிவேலை ஜாதி பெயரை சொல்லி திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் அவர்கள் 2 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஊராட்சி மன்ற தலைவர் பழனிவேல் ராசிபுரம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் இதுபற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story