என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மனைவியை மிரட்ட ஊழியரை கொடூரமாக தாக்கிய வடமாநில வாலிபர்
- மனைவியை மிரட்டுவதற்காக வாலிபர் தன்னுடன் ஓட்டலில் வேலை பார்க்கும் தொழிலாளரை கொடூரமாக தாக்கினார்.
- அந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
வேடசந்தூர்:
வேடசந்தூர் அருகே ஒட்டன்சத்திரம் சாலை சேணான்கோட்டையில் உள்ள ஓட்டலில் வடமாநில வாலிபர் ஆனந்த் என்பவர் வேலைபார்த்து வருகிறார். இவர் தனது 2 வயது மகளை கொடூரமாக தாக்கினார். இதுகுறித்து அவரது மனைவி போலீசில் புகார் அளித்தார். அதற்கு வழக்கு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ஆனந்த் தலைமறைவாகி வேடசந்தூர் பகுதியில் உள்ள ஓட்டலில் வேலைபார்த்து வந்துள்ளார்.
மேலும் தனது மனைவியிடம் புகாரை வாபஸ் வாங்குமாறு கேட்டுள்ளார். அதற்கு அவர் மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஆனந்த் தன்னுடன் ஓட்டலில் வேலை பார்க்கும் தொழிலாளரை கொடூரமாக தாக்கினார்.
இதனை செல்போனில் படம் பிடித்து வீடியோவை தனது மனைவிக்கு அனுப்பி வைத்தார். புகாரை வாபஸ் பெறாவிட்டால் இதேபோல் உன்னையும் கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார்.
அந்த வீடியே தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதனைதொடர்ந்து வேடசந்தூர் போலீசார் வடமாநில வாலிபரை தேடி வருகின்றனர்.
ஆனந்த் மனநிலை பாதிக்கப்பட்ட சைக்கோ போல் நடந்து கொண்டதாக அவருடன் வேலை பார்ப்பவர்கள் தெரிவித்தனர்.