என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  பாண்டமங்கலம் அருகே மூதாட்டி அணிந்திருந்த 8 பவுன் தங்க செயினை நூதன முறையில் பறித்துச் சென்ற மர்மப் பெண் போலீசார் தீவிர விசாரணை
  X

  சி.சி.டி.வி. கேமராவில் பதிவான பெண்ணின் உருவம்.

  பாண்டமங்கலம் அருகே மூதாட்டி அணிந்திருந்த 8 பவுன் தங்க செயினை நூதன முறையில் பறித்துச் சென்ற மர்மப் பெண் போலீசார் தீவிர விசாரணை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • அடையாளம் தெரியாத பெண் ஒருவர் வந்து தண்ணீர் கேட்டுள்ளார்.
  • காலில் விழுந்தவுடன் அவர் மறைத்து வைத்திருந்த மயக்க மருந்தை காலில் தடவி உள்ளார்.

  பரமத்தி வேலூர்:

  நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பாண்டமங்கலம் அருகே நெட்டையாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பழனியப்பன். இவரது மனைவி எட்டம்மாள்(வயது 63). இவர்களது மகன் தியாகராஜன் (35).இவர் ஈரோட்டில் பெட்ரோல் பங்க் வைத்து நடத்தி வருகிறார்.

  இந்த நிலையில் எட்டம்மாள் வீட்டில் தனியாக இருந்த போது அடையாளம் தெரியாத பெண் ஒருவர் வந்து தண்ணீர் கேட்டுள்ளார். பட்டம்மாள் தண்ணீரை எடுத்து வந்து கொடுத்துள்ளார்.தண்ணீரை வாங்கி குடித்த அந்த பெண் திடீரென எட்டம்மாளின் காலில் விழந்து தண்ணீர் கொடுத்ததற்கு நன்றி தெரிவித்துள்ளார்.

  காலில் விழுந்தவுடன் அவர் மறைத்து வைத்திருந்த மயக்க மருந்தை காலில் தடவி உள்ளார்.அதனால் எட்ட ம்மாளுக்கு மயக்கம் வந்தது. சிறிது நேரம் கழித்து மயக்கம் தெளிந்து எழுந்து பார்த்த போது எட்டம்மாளின் கழுத்தில் அணிந்திருந்த 8 பவுன் தங்க செயின் மாயமானதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களை அழைத்து நடந்த விபரத்தை தெரிவித்துள்ளார். பின்னர் இது குறித்து பரமத்திவேலூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் அடிப்படையின் பரமத்திவேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரம்மாள் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து மர்ம பெண்ணின் புகைப்படத்தின் மூலம் நூதன முறையில் நகையை பறித்து சென்ற மர்ம பெண்ணை தீவிர மாக வலைபேசிதேடி வருகின்றனர். பட்டப்பகலில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் 8 பவுன் தங்க செயினை நூதன முறையில் மர்மப் பெண் திருடிச்சென்ற‌ சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  Next Story
  ×