search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சை மாநகராட்சி பள்ளியில் பொதுத்தேர்வில் தேர்வான மாணவர்களுக்கு பரிசு - மேயர் வழங்கினார்
    X

    மாணவர்களுக்கு மேயர் சண்.ராமநாதன் பரிசு வழங்கினார்.

    தஞ்சை மாநகராட்சி பள்ளியில் பொதுத்தேர்வில் தேர்வான மாணவர்களுக்கு பரிசு - மேயர் வழங்கினார்

    • பிளஸ்-2 மற்றும் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகளில் பள்ளிகளில் அதிக மதிப்பெண் பெற்ற 5 மாணவ, மாணவிகளை பாராட்டி மேயர் சண்.ராமநாதன் நினைவு பரிசினை வழங்கினார்.
    • அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகள் உயர்கல்வி பயில்வதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தி தருவதோடு ஊக்கத்தொகையும் மாநகராட்சி வழங்கும் என கூறினார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் என மொத்தம் 17 பள்ளிகள் உள்ளன.

    தற்போது வெளியிடப்பட்ட பிளஸ்-2 மற்றும் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகளில் பள்ளிகளில் அதிக மதிப்பெண் பெற்ற 5 மாணவ, மாணவிகளை பாராட்டி மேயர் சண்.ராமநாதன் நினைவு பரிசினை வழங்கினார்.

    தென்கீழ் அலங்கம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் அதிக மதிப்பெண் பெற்ற சுதேசி (12-ம் வகுப்பு), ஸ்ரீஹரிசிவசக்தி (10-ம் வகுப்பு), அண்ணாநகர் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் அபிநயா (12-ம் வகுப்பு),

    ரேணுகா (10-ம் வகுப்பு), முனிசிபல் காலனி மாநகரட்சி உயர்நிலைப்பள்ளி மாணவர் சூர்யா (10-ம் வகுப்பு) ஆகியோருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.

    மேலும் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகள் உயர்கல்வி பயில்வதற்கான வாய்ப்புகளை ஏற்படு த்தி தருவதோடு, ஊக்க த்தொகையும் மாநகராட்சி வழங்கும் என மேயர் கூறினார்.

    அப்போது பள்ளி தலைமை ஆசிரியர், மாணவர்களின் பெற்றோர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×