என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
செவிலியரை தாக்கியவர் கைது
- விநாயகம் என்பவர் கிராம செவிலியர் செல்வியை கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது.
- காயமடைந்த செல்வி தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
தருமபுரி,
தருமபுரியை அடுத்த பழைய தர்மபுரி துணை சுகாதார நிலையத்தில் கிராம சுகாதார செவிலியராக பணியாற்றி வருபவர் செல்வி.
இவர் கே.என்.சவுளூர் பகுதியில் உள்ள குழந்தைகளுக்கு தடுப்பூசி போட்டுவிட்டு கோணங்கி நாயக்கன அள்ளி ஆரம்ப சுகாதார நிலையத்தில் வேக்சின் கேரியரை ஒப்படைக்க சென்றார்.
கொளகத்தூர் அருகே அதே பகுதியைச் சேர்ந்த விநாயகம் என்பவர் கிராம செவிலியர் செல்வியை கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் காயமடைந்த செல்வி தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.அவர் தந்த புகாரின்பேரில் தருமபுரி நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விநாயகத்தை கைது செய்தனர்.
கொரோனா காலகட்டத்தில் தடுப்பூசி போடும் விவகாரத்தில் 2 பேருக்கும் இடையே முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.இது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.