என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  சிதம்பரம் அருகே விவசாயி வீட்டில் கதவை உடைத்து பணம் கொள்ளை: 2 பேர் கைது
  X

  சிதம்பரம் அருகே விவசாயி வீட்டில் கதவை உடைத்து பணம் கொள்ளை: 2 பேர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தனது குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கினார்.
  • சத்தம் கேட்டு கலியமூர்த்தி திடுக்கிட்டு எழுந்தார்.

  கடலூர்:

  கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள தாண்டவராயன்சோழகன் பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் கலியமூர்த்தி. விவசாயி. அவரது மனைவி சுதாஇவர் சம்பவத்தன்று தனது குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கினார். நள்ளிரவு சமயம் மர்ம நபர்கள் அங்கு வந்தனர். அவர்கள் வீட்டில் பின் பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவை திறந்து அதில் இருந்த பணத்தை எடுத்தனர்.

  அதனை தொடர்ந்து கலியமூர்த்தியின் குழந்தை கழுத்தில் கிடந்த நகையை மர்ம நபர்கள் பறிக்க முயன்றனர். அப்போது குழந்தை அழுதது. சத்தம் கேட்டு கலியமூர்த்தி திடுக்கிட்டு எழுந்தார். அப்போது மர்ம நபர்கள் நிற்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே கலியமூர்த்தி அவர்களை பிடிக்க முயன்றார். அதற்குள் கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். பதறி போன கலியமூர்த்தி பீரோவை பார்த்த போது அதில் இருந்த ரூ. 2 ஆயிரம் பணம் கொள்ளை போய் இருந்தது.

  இதுகுறித்து கலியமூர்த்தி அண்ணாமலைநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிந்து கொள்ளையர்களை தேடி வந்தனர். விசாரணையில் சிதம்பரம் மெய்க்காவல் தெருவை சேர்ந்த மணிகண்டன், இளவுதேவன், கார்த்திக் என தெரியவந்தது. இவர்களில் மணிகண்டன், கார்த்திக்கை போலீசார் கைது செய்தனர். மற்றொருவரை தேடி வருகிறார்கள்.

  Next Story
  ×