search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு கூடுதல் கட்டிடம் கட்ட அடிக்கல்
    X

    கட்டிட கட்டுமான பணியை மேயர் சண்.ராமநாதன் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

    தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு கூடுதல் கட்டிடம் கட்ட அடிக்கல்

    • இந்த காத்திருப்பு கூடமானது 6000 சதுர அடி பரப்பளவில் ஆண்கள், பெண்களுக்கு என தனிதனியாக 2 கட்டிடங்கள் கட்டப்பட உள்ளது.
    • தேசிய நகர்புற வாழ்வாதார இயக்கம் திட்டத்தின் கீழ் ேநாயாளிகளை அழைத்து வருபவர்கள், உறவினர்கள் தங்குவதற்காக ரூ.3 கோடி மதிப்பில் காத்திருப்பு கூடம் கட்ட முடிவு செய்யப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தேசிய நகர்புற வாழ்வாதார இயக்கம் திட்டத்தின் கீழ் ேநாயாளிகளை அைழத்து வருபவர்கள், உறவினர்கள் தங்குவதற்காக ரூ.3 கோடி மதிப்பில் காத்திருப்பு கூடம் கட்ட முடிவு செய்யப்பட்டது. அதன்படி இதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. இதனை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.

    இந்த காத்திருப்பு கூடமானது 6000 சதுர அடி பரப்பளவில் ஆண்கள், பெண்களுக்கு என தனிதனியாக 2 கட்டிடங்கள் கட்டப்பட உள்ளது. இதில் குளியளறை, கழிவறை உள்ளிட்ட பல்வேறு வசதிகள் அமைய உள்ளன என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த கட்டுமான பணி மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளபட்டு பணி முடிந்ததும் மருத்துவ கல்லூரி மருத்துவமனை நிர்வாகத்திடம் ஒப்படை க்கப்பட உள்ளது.

    இந்த நிகழ்ச்சியில் துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மருத்துவ கல்லூரி டீன் ரவிக்குமார், ஆர்.எம்.ஓ. செல்வம், மாமன்ற உறுப்பினர் சர்மிளாமேரி, மாநகராட்சி செயற்பொறியாளர் ஜெகதீசன், உதவி பொறியாளர் ரமேஷ் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×