search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தென்காசி உழவர் சந்தை விழிப்புணர்வு முகாம்
    X

    உழவர் சந்தை விழிப்புணர்வு முகாம் நடைபெற்ற போது எடுத்த படம்.


    தென்காசி உழவர் சந்தை விழிப்புணர்வு முகாம்

    • தென்காசி உழவர்சந்தை நிர்வாக அலுவலர் இராமச்சந்திரன் தலைமையிலும் தென்காசி வேளாண்மை வணிக வேளாண்மை அலுவலர் முகைதீன்பிச்சை முன்னிலையில் நடைபெற்றது.
    • உழவர் சந்தையின் பயன்கள் செயல்பாடுகள் பற்றியும் அடையாள அட்டை பெறும் வழிமுறைகள் பற்றியும் தென்காசி உழவர்சந்தை நிர்வாக அலுவலர் இராமச்சந்திரன் விளக்கிக்கூறினார்

    தென்காசி:

    உழவர் சந்தையில் விவசாயிகள் மற்றும் நுகர்வோர்கள் வருகையை அதிகரிக்கும் வகையில் கடையநல்லூர் வட்டாரம் கொடிக்குறிச்சி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கொடிகுறிச்சி மற்றும் சிவராமபேட்டை விவசாயிகளுக்கான உழவர்சந்தை விழிப்புணர்வு முகாம் மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் வேளாண் வணிகம் கிருஷ்ணகுமார் அறிவுரைப்படி தென்காசி உழவர்சந்தை நிர்வாக அலுவலர் இராமச்சந்திரன் தலைமையிலும் தென்காசி வேளாண்மை வணிக வேளாண்மை அலுவலர் முகைதீன்பிச்சை முன்னிலையில் நடைபெற்றது.

    கடைய நல்லூர் வேளாண்மை வணிக உதவி வேளாண்மை அலுவலர் கருப்பையா வரவேற்று பேசினார். வேளாண்மை வணிகம் வேளாண்மை அலுவலர் முகைதீன்பிச்சை விளைபொருட்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்து லாபம் பெறவும் வேளாண் வணிக திட்டங்கள் பற்றியும் விளக்கிக் கூறினார்.

    முகாமில் உழவர் சந்தையின் பயன்கள் செயல்பாடுகள் பற்றியும் அடையாள அட்டை பெறும் வழிமுறைகள் பற்றியும் தென்காசி உழவர்சந்தை நிர்வாக அலுவலர் இராமச்சந்திரன் விளக்கிக்கூறினார்.உழவர்சந்தை விவசாயிகளுக்கு காய்கறிகள் மற்றும் பழங்களுக்கு விலை நிர்ணயம் செய்யும் முறை பற்றி தென்காசி உழவர்சந்தை உதவி நிர்வாக அலுவலர் செந்தில்குமார் விளக்கிக் கூறினார்.

    தென்காசி உழவர்சந்தை உதவி நிர்வாக அலுவலர் கணேசன் காய்கறி சாகுபடி முறைகள் மற்றும் பயிர்பாதுகாப்பு செய்யும் முறைகள் பற்றியும் விளக்கிக் கூறினார். நிறைவாக செங்கோட்டை வேளாண்மை வணிக உதவி வேளாண்மை அலுவலர் இப்ராஹிம் நன்றி கூறினார்.


    Next Story
    ×