என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  சேலத்தில் குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது
  X

  சேலத்தில் குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சேலம், கோரிமேடு மாரியம்மன் கோவில் தெரு ஜல்லிக்காடு பகுதியைச் சேர்ந்தவரை குண்டர் சட்டத்தில் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
  • தொடர்ந்து குற்றச்செயலில் ஈடுபட்ட மணிகண்டனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது.

  சேலம்:

  சேலம் கோரிமேடு மாரியம்மன் கோவில் தெரு ஜல்லிக்காடு பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் என்ற கிட்டான் மணி(வயது 28). இவர்சம்பவத்தன்று கோரி மேட்டில் உள்ள வேலை வாய்ப்பு அலுவலகம் அருகே வந்து கொண்டிருந்த ஜெயபிரகாஷ் என்பவரை வழிமறித்து பீர் பாட்டிலால் தாக்கி அவர் வைத்திருந்த ரூ.5500யை பறித்துச் சென்றார்.

  இதையடுத்து ஜெயப்பி ரகாஷ் கொடுத்த புகாரின் பேரில் மணிகண்டனை போலீசார் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட மணிகண்டன் ஏற்கனவே கடந்த 2021 -ம் ஆண்டு ஜனவரி மாதம் தனது கூட்டாளியுடன் சேர்ந்து ஜல்லிக்காடு மாரியம்மன் கோவில் அருகே வந்த சின்ன கொல்லப்பட்டியைச் சேர்ந்த விவேகானந்தன் என்பவரை தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டிருந்தார்.

  பிறகு ஜாமினில் வந்த மணிகண்டன் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பெரிய கொ ல்லப்பட்டியைச் சேர்ந்த மூர்த்தி என்பவரை விரட்டி அவர் வைத்திருந்த பணத்தை பறித்து சென்றார்.

  இது தொடர்பாக கன்னங்குறிச்சி போலீஸ் நிலை யத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து குற்றச்செ

  யலில் ஈடுபட்ட மணிகண்ட னை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கன்னங்குறிச்சி இன்ஸ்பெக்டர் மற்றும் சேலம் மாநகர துணை ஆணையாளர் மாடசாமி ஆகியோர் மாநகர போலீஸ் கமிஷனர் நஜ்மல் ஹோடாவிடம் சிபாரிசு செய்தனர்.

  இதைத் தொடர்ந்து மணிகண்டனை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க கமிஷ னர் நஜ்மல் ஹோண்டா உத்தரவிட்டார்.

  Next Story
  ×