search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திண்டுக்கல் அருகே டாஸ்மாக் ஊழியரை தாக்கி பைக்கை எரித்த கும்பல்
    X

    காயமடைந்த முத்துக்குமார வடிவேல்.

    திண்டுக்கல் அருகே டாஸ்மாக் ஊழியரை தாக்கி பைக்கை எரித்த கும்பல்

    • திண்டுக்கல் அருகே டாஸ்மாக் ஊழியரை தாக்கிய கும்பல் பைக்கை எரித்தது.
    • கண்காணிப்பு காமிரா பதிவுகளை வைத்து மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் அருகே ராமையன்பட்டியில் அரசு டாஸ்மாக் கடை உள்ளது. இங்கு எருமைக்கார தெருவை சேர்ந்த வேலு என்பவர் சூப்பர்வைசராகவும், வேடசந்தூர் குடப்பத்தைச் சேர்ந்த முத்துகுமார வடிவேல் என்பவர் விற்பனையாளராகவும் உள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று அரசு டாஸ்மாக் கடையின் அருகே மது அருந்திக் கொண்டிருந்த இருதரப்பினருடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதை தடுக்க வந்த விற்பனையாளர் முத்துக்குமார வடிவேலை ஒரு தரப்பினை சேர்ந்த 2 வாலிபர்கள் மதுபாட்டிலால் தாக்குதல் நடத்தி,அவரது செல்போனை பறித்து சென்றனர். மேலும் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 மோட்டார் சைக்கிள்கள் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்து எரித்தனர். பலத்த காயம் அடைந்த முத்துக்குமார வடிவேலை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.இது குறித்து திண்டுக்கல் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.மேலும் அந்தப் பகுதியில் பதிவாகி இருக்கும் கண்காணிப்பு கேமராக்களின் காட்சிகளை வைத்து முத்துக்குமார வடிவேல் மீது தாக்குதல் நடத்திய 2 வாலிபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

    இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தெரிவிக்கையில், டாஸ்மாக் மதுபான கடையில் மதுபாட்டிலை வாங்கி அதன் அருகில் உள்ள காட்டுப் பகுதியில் திறந்த வெளியில் மது அருந்தும் வாலிபர்கள் தகாத வார்த்தைகளை கூறி அடிக்கடி சண்டையிட்டு கொள்கின்றனர்.இதனால் அந்தப் பகுதியில் பொதுமக்கள் யாரும் செல்வதற்கே அச்சப்படுகின்றனர். ஆகவே பொது இடங்களில் திறந்த வெளியில் மது அருந்தும் நபர்கள் மீது போலீசார் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்

    Next Story
    ×