என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  மனைவிக்காக பரிந்து பேசியதால் ஆத்திரம்- முதியவர் வீட்டின் மீது வெடிகுண்டு வீசியவர் கைது
  X

  மனைவிக்காக பரிந்து பேசியதால் ஆத்திரம்- முதியவர் வீட்டின் மீது வெடிகுண்டு வீசியவர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சில நாட்களுக்கு முன்பு சிவகுமார் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டார். அங்கு வந்த சீனிவாசன், இரு தரப்பையும் சமரசம் செய்ய முயன்றார்.
  • சரவணகுமார் சத்தம் போடவே, கோபம் அடைந்த முதியவர், ‘ஒழுங்காக குடும்பம் நடத்து, இல்லையேல் உனக்குத்தான் சங்கடம்’ என்று அறிவுரை கூறி விட்டு சென்றார்.

  மதுரை:

  மதுரை ஆர்.ஆர். மண்டபம் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன் (60). இவரது வீட்டின் அருகே சரவணன் என்ற சரவணகுமார் (28) குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

  இவருக்கும் மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம். சில நாட்களுக்கு முன்பு சிவகுமார் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டார். அங்கு வந்த சீனிவாசன், இரு தரப்பையும் சமரசம் செய்ய முயன்றார். சரவணகுமார் சத்தம் போடவே, கோபம் அடைந்த முதியவர், 'ஒழுங்காக குடும்பம் நடத்து, இல்லையேல் உனக்குத்தான் சங்கடம்' என்று அறிவுரை கூறி விட்டு சென்றார்.

  கணவன்-மனைவி பிரச்சினையில் 3-வது நபர் தலையிட்டதால், சரவணகுமாருக்கு ஆத்திரம் ஏற்பட்டது. சம்பவத்தன்று இரவு முதியவர் சீனிவாசன் வீட்டில் தூங்கினார். அங்கு வந்த சரவணகுமார், பெட்ரோல் குண்டை வீசிவிட்டு தப்பினார். இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

  இதுகுறித்து சீனிவாசன் மதிச்சியம் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, சரவணன் என்ற சரவணகுமாரை கைது செய்தனர்.

  Next Story
  ×