கிரிக்கெட் விளையாட்டில் மோதல்- வாலிபர் கைது

கிரிக்கெட் விளையாட்டு தொடர்பான முன்விரோதத்தில் வாலிபரை அடித்து, அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக மற்றொரு வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கைது
கைது
Published on: 

நெல்லை:

தேவர்குளம் அருகே உள்ள அச்சம்பட்டியை சேர்ந்தவர் சுந்தர்ராஜ் (வயது25). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த யோசுவா (25), என்பவருக்கும் கிரிக்கெட் விளையாட்டில் பிரச்சனை ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் நேற்று சுந்தரராஜ், தேவர்குளம் பஜாரில் நின்று கொண்டிருந்த போது அங்கு வந்த யோசுவா, சுந்தர்ராஜை அவதூறாக பேசி, கன்னத்தில் அடித்து, ஆயுதத்தைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இதுகுறித்து சுந்தர்ராஜ் தேவர்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் அடிப்படையில் உதவி ஆய்வாளர் விசாரணை மேற்கொண்டு யோசுவாவை கைது செய்தார்.

X