என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
15 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மளிகைக்கடைக்காரர்- பள்ளியில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியால் சிக்கினார்
- மாணவிகளுக்கு குட் டச், பேட் டச் குறித்தும், பாலியல் சம்பந்தமானவை குறித்தும் தலைமை ஆசிரியை விளக்கி கொண்டிருந்தார்.
- மாணவிகளிடமும் கருத்து கேட்டு, அதற்கு தெளிவான விளக்கம் அளித்து கொண்டிருந்தார்.
கோவை:
பொள்ளாச்சி ஆனைமலையை சேர்ந்தவர் நடராஜன். இவர் அந்த பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார்.
இவரது கடைக்கு அந்த பகுதியை சேர்ந்த மக்கள் காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்க வருவது வழக்கம்.
இந்த நிலையில் நடராஜன் கடைக்கு பொருட்கள் வாங்க வரும் அந்த பகுதி சிறுமிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
கடைக்கு தனியாக வரும் சிறுமிகளை கடைக்குள் அழைத்து, சிறுமிகளிடம் தொடக்கூடாத இடங்களில் தொட்டு பேசுவது, ஆபாசமாக பேசுவது என பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.
சிறுமிகள் இதனை வீட்டில் தெரிவித்தால் அவமானம் என்று கருதி வீட்டில் சொல்லாமலே தங்கள் மனதுக்குள்ளேயே போட்டு மறைத்துள்ளனர்.
இந்த நிலையில் தான் மாணவிகள் படித்து வரும் பள்ளியில் பள்ளியின் தலைமை ஆசிரியை சம்பவத்தன்று மாணவிகளுக்கு பாலியல் குறித்த விழிப்புணர்வு வகுப்பு எடுத்தார்.
அப்போது மாணவிகளுக்கு குட் டச், பேட் டச் குறித்தும், பாலியல் சம்பந்தமானவை குறித்தும் விளக்கி கொண்டிருந்தார். மேலும் மாணவிகளிடமும் கருத்து கேட்டு, அதற்கு தெளிவான விளக்கம் அளித்து கொண்டிருந்தார்.
அப்போது கடைக்காரரின் தொல்லையை சொல்வதற்கு இதுதான் சரியான இடம் என நினைத்த அங்கு படித்து வரும் 13 வயது மாணவி பேசுவதற்கு எழுந்தார். மாணவி, தலைமை ஆசிரியையிடம், எங்கள் பகுதியில் மளிகை கடை நடத்தி வரும் நடராஜன் என்பவர் தன்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட அதிர்ச்சி தகவலை தெரிவித்தார்.
அவர் மட்டுமல்லாமல் அங்கு படிக்கும் மேலும் 14 மாணவிகள் தங்களுக்கு அந்த கடைக்காரர் பாலியல் தொல்லை கொடுத்தாக தெரிவித்தனர்.
இதை கேட்டதும் தலைமை ஆசிரியை அதிர்ச்சியானார். உடனடியாக சம்பவம் குறித்து பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தார்.
அவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் மளிகைக்கடைக்காரர் நடராஜன் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தனர்.
தொடர்ந்து நடராஜன் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உண்மை தானா? எத்தனை பேர் அவரால் பாதிக்கப்பட்டனர்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்