search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேளச்சேரி சாலையில் ஒரு வாரமாக பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர்- வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் பாதிப்பு
    X

    வேளச்சேரி சாலையில் ஒரு வாரமாக பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர்- வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் பாதிப்பு

    • பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மூக்கை பொத்திக்கொண்டு செல்லும் அவல நிலை உள்ளது.
    • மக்கள் மெட்ரோ குடிநீர் அதிகாரிகளிடம் புகார் கூறியும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    சென்னை:

    வேளச்சேரி காந்தி சாலையில் கழிவு நீர் சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு உள்ளது.இதனால் சாக்கடை கழிவு நீர் சாலையில் கடந்த 7 நாட்களாக பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடைக்காரர்கள் இதனால் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

    மேலும் சாலையின் மையப்பகுதியில் உள்ள சாக்கடை கால்வாயில் இருந்து கழிவுநீர் வெளியேறி சதுப்பு நிலமாக காட்சியளிக்கிறது. துர்நாற்றம் வீசுவதால், நடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மூக்கை பொத்திக்கொண்டு செல்லும் அவல நிலை உள்ளது.

    தினமும் அந்த வழியாக செல்வோர் இதனால் ஒரு வாரத்திற்கும் மேல் அவதிப்பட்டு வருகின்றனர். மெட்ரோ கழிவு நீர் அகற்றும் வாரிய ஊழியர்கள் சரிவர செயல்படாததால் இருசக்கர வாகன ஓட்டிகள் அப்பகுதியில் சறுக்கி விழுந்து உள்ளனர்.

    இது குறித்து அப்பகுதி மக்கள் மெட்ரோ குடிநீர் அதிகாரிகளிடம் புகார் கூறியும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை இதனால் அப்பகுதியில் வீடுகளில் வசிக்கும் மக்கள், மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    இதுகுறித்து கழிவுநீரகற்று வாரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    Next Story
    ×