என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  சேலத்தில் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சேலம் அம்மாப்பேட்டையில் உள்ள பரமக்குடி நல்லுசாமி தெருவை சேர்ந்தவர் ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி ராஜன் .
  • அம்மாப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

  சேலம்:

  பா.ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி உள்ளிட்ட இந்து அமைப்புகளின் நிர்வாகிகள் வீடு அலுவலகங்கள் தற்போது குறி வைத்து மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகள், பாட்டில்கள் வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர்

  கோவை, மதுரை, திண்டுக்கல்லை தொடர்ந்து சேலத்தில் ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி வீட்டில் இன்று அதிகாலை பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தி உள்ள சம்பவம் பதட்டம் மற்றும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  சேலம் அம்மாப்பேட்டையில் உள்ள பரமக்குடி நல்லுசாமி தெருவை சேர்ந்தவர் ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி ராஜன் (வயது 56). இவர் ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பேசி வருகிறார். நேற்று இரவு வீட்டில் வழக்கம்போல் சாப்பிட்டு விட்டு ராஜன் தூங்கி கொண்டிருந்தார்.

  இந்த நிலையில் இன்று அதிகாலை 2 மணிக்கு மர்ம நபர்கள் 2 பேர் மோட்டார்சைக்கிளில் அங்கு வந்தனர். அப்போது அவர்களை பார்த்ததும் தொடர்ந்து நாய்கள் குறைத்து கொண்டிருந்தது.

  இதையடுத்து அக்கம் பக்கத்தினர், நாய்கள் குறைக்கும் சத்தம்கேட்டு வீட்டின் கதவுகளை திறந்து வெளியே வந்தனர். பொதுமக்கள் வருவதை கண்டதும் திடுக்கிட்ட மர்ம நபர்கள் பெட்ரோல்- மண்எண்ணையை கலந்த பாட்டிலை ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி ராஜன் வீட்டில் வீசினார்கள். அந்த பாட்டில் வீட்டின் முன்பக்கம் விழுந்து பயங்கர சத்தத்துடன் வெடித்தது.

  சத்தம் கேட்டு தூங்கி கொண்டிருந்த ராஜன் எழுந்து வெளியே வந்தார். அதற்குள் மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர். அதிர்ஷ்டவசமாக அந்த பாட்டில் தீப்பற்றி எரியவில்லை. இதனால் வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த கார், மோட்டார்சைக்கிள் மற்றும் உடமைகள் தப்பியது.

  மர்ம நபர்களின் இந்த தாக்குதல் சம்பவத்தால் அக்கம், பக்கத்தினர் பீதி அடைந்துள்ளனர்.

  இதுகுறித்து அம்மாப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். அங்கு வீடுகளில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமிராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

  மேலும் மோட்டார்சைக்கிளில் தப்பி சென்ற மர்ம நபர்கள் அடையாளம் பற்றி அக்கம்பக்கத்தினரிடம் கேட்டு விசாரித்து வருகின்றனர்.

  ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி வீட்டில் மர்ம நபர்கள் பெட்ரோல் பாட்டில் வீசிய சம்பவத்தை அறிந்ததும் ஆர்.எஸ்.எஸ் , பா.ஜ.க, இந்து முன்னணி நிர்வாகிகள் அங்கு திரண்டனர். ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி ராஜன் வீட்டின் முன்பு பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தெரு முழுவதும் கண்காணிப்பு மற்றும் தீவிர ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், சேலத்தில் உள்ள முக்கிய ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க. நிர்வாகிகளுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

  ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  Next Story
  ×