search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஒவ்வொரு தெருக்களிலும் பா.ம.க. கொடி ஏற்றுங்கள்- ராமதாஸ்
    X

    ஒவ்வொரு தெருக்களிலும் பா.ம.க. கொடி ஏற்றுங்கள்- ராமதாஸ்

    • இன்னும் 20 மாதங்களுக்குப் பிறகு தானே மக்களவைத் தேர்தல் வருகிறது என்ற அலட்சியம் வேண்டாம். இப்போதே தேர்தல் பணிகளைத் தொடங்குங்கள்.
    • திண்ணைப் பிரச்சாரத்தின் மூலம் மக்களை அவர்கள் இடத்திற்கே சென்று சந்தியுங்கள்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டு அரசியலின் தவிர்க்க முடியாத சக்தியாகவும், மக்களுக்கான உரிமைகளை வென்றெடுத்துக் கொடுப்பதை முழு நேரப் பணியாகவும் கொண்டிருக்கும் கட்சியாக திகழும் பா.ம.க. வரும் 16-ந்தேதி 33 ஆண்டுகளை நிறைவு செய்து 34-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

    இந்தத் தருணத்தில் உங்களை நான் கேட்டுக்கொள்வதெல்லாம், ''மக்களை சந்தியுங்கள், அவர்களின் தேவைகளை அறியுங்கள், அவர்களுக்காக போராடி கோரிக்கைகளை நிறைவேற்றித் தாருங்கள்'' என்பதைத் தான். மக்களின் ஆதரவைப் பெறாமல் வெற்றி சாத்தியமல்ல.

    அதனால், இன்னும் 20 மாதங்களுக்குப் பிறகு தானே மக்களவைத் தேர்தல் வருகிறது என்ற அலட்சியம் வேண்டாம். இப்போதே தேர்தல் பணிகளைத் தொடங்குங்கள். திண்ணைப் பிரச்சாரத்தின் மூலம் மக்களை அவர்கள் இடத்திற்கே சென்று சந்தியுங்கள்.

    பாட்டாளி மக்கள் கட்சியின் சாதனைகளை எடுத்துக் கூறி, அவர்களின் ஆதரவை உறுதி செய்யுங்கள். அவ்வாறு செய்தால், 2024 மக்களவைத் தேர்தலில் நமது வெற்றி வாய்ப்பை உறுதி செய்ய முடியும்.

    2020, 2021-ம் ஆண்டுகளில் பாட்டாளி மக்கள் கட்சியின் ஆண்டு விழாக்களை, கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாடுகள் காரணமாக மிகப்பெரிய அளவில் கொண்டாட முடியவில்லை. நடப்பாண்டில் கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை.

    ஆனாலும், நாம் நமக்கான பொறுப்புணர்வுடன் ஆண்டு விழாவைக் கொண்டாட வேண்டும். ஒவ்வொரு ஊரிலும், ஒவ்வொரு தெருக்களிலும் பாட்டாளி மக்கள் கட்சியின் கொடி ஏற்றப்பட வேண்டும். வாய்ப்புள்ள இடங்களில் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும். பாட்டாளி மக்கள் கட்சி தொடக்க விழாவுக்கான ஆண்டு கொண்டாட்டங்கள் இந்த ஆண்டு வழக்கமானவையாக இல்லாமல், இலக்கை எட்டுவதற்கான பயணத்தின் தொடக்கமாக அமையட்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×