search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரியில் சாரல் மழை நீடிப்பு- பூதப்பாண்டியில் 15.4 மி.மீ. பதிவு
    X

    குமரியில் சாரல் மழை நீடிப்பு- பூதப்பாண்டியில் 15.4 மி.மீ. பதிவு

    • பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதிகளிலும் விட்டுவிட்டு மழை பெய்து கொண்டே இருக்கிறது.
    • மலையோர பகுதியான பாலமோர் பகுதிலும் மழை பெய்து வருவதையடுத்து அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து சற்று அதிகரித்து உள்ளது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து வந்த நிலையில் இரண்டு நாட்களாக மழை சற்று குறைந்திருந்தது.

    நேற்று காலையில் வழக்கம்போல் வெயில் அடித்து வந்த நிலையில் மதியத்திற்கு பிறகு சீதோஷ்ண நிலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டது. மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. இரவும் விட்டுவிட்டு மழை பெய்து கொண்டே இருந்தது. இன்று அதிகாலையிலும் சாரல் மழை நீடித்தது.

    நாகர்கோவில் பகுதியில் அவ்வப்போது மழை தூறிக்கொண்டே இருந்தது. பூதப்பாண்டி, கன்னிமார், கொட்டாரம், குழித்துறை, மயிலாடி, கோழிப்போ விளை, அடையாமடை, குருந்தன்கோடு மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் மழை பெய்தது.

    பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதிகளிலும் விட்டுவிட்டு மழை பெய்து கொண்டே இருக்கிறது. மலையோர பகுதியான பாலமோர் பகுதிலும் மழை பெய்து வருவதையடுத்து அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து சற்று அதிகரித்து உள்ளது.

    கடந்த இரண்டு நாட்களாக பெருஞ்சாணி, சிற்றார் அணைகள் மூடப்பட்டிருந்த நிலையில் இன்று பாசனத்திற்காக மீண்டும் அணை திறக்கப்பட்டு உள்ளது. திற்பரப்பு அருவியிலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அருவியில் மிதமான அளவு தண்ணீர் கொட்டி வருகிறது.

    பூதப்பாண்டியில் அதிகபட்சமாக 15.4 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 39.16 அடியாக உள்ளது. அணைக்கு 664 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 639 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    பெருஞ்சானி அணை நீர்மட்டம் 59.10 அடியாக உள்ளது. அணைக்கு 391 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 160 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. சிற்றார்-1 அணையின் நீர்மட்டம் 11.48 அடியாக உள்ளது. அணைக்கு 60 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 100 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    சிற்றார்-2 அணையின் நீர்மட்டம் 11.58 அடியாகவும், பொய்கை அணை நீர்மட்டம் 16.90 அடியாகவும், மாம்பழத்துறை அணை நீர்மட்டம் 28.63 அடியாகவும், உள்ளது. நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணையின் நீர்மட்டம் 6.50 அடியாக சரிந்து உள்ளது.

    மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பேச்சிப்பாறை-13.2, பெருஞ்சாணி-8.4, சிற்றார்-1 15, சிற்றார்-2 4.8, பூதப்பாண்டி-15.4, களியல்-5.8 கன்னிமார்- 5.8, கொட்டாரம்-2.4, குழித்துறை-7.5, மயிலாடி- 3.6, நாகர்கோவில்-6.2, தக்கலை-2, சுருளோடு-9, பாலமோர்-12.6, மாம்ப ழத்துறை-6.10, திற்பரப்பு-5, ஆரல்வாய்மொழி-7, கோழிப்போர் விளை-3, அடையாமடை-6.2, குருந்தன்கோடு-4.2, முள்ளங்கினா விளை-3.6.

    Next Story
    ×