என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  ஓமலூர் அருகே 4 வழி சாலை பணி தடுத்து நிறுத்தம்- விவசாயிகள் திடீர் போராட்டம்
  X

  ஓமலூர் அருகே 4 வழி சாலை பணி தடுத்து நிறுத்தம்- விவசாயிகள் திடீர் போராட்டம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • விவசாய தோட்டங்களுக்கு செல்வதற்கு வழி இல்லாமல் போய்விடும் என்பதால் இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
  • எங்களுக்கு இரு பகுதிகளிலும் சர்வீஸ் சாலை அமைத்து கொடுத்துவிட்டு இரும்புக் கம்பியை பொருத்திக் கொள்ளுங்கள் என்றனர்.

  ஓமலூர்:

  சேலம் மாவட்டம் ஓமலூரில் இருந்து மேச்சேரி வரை சுமார் 20 கிலோமீட்டர் தொலைவிற்கு 2 வழி சாலையாக இருந்த சாலையை 4 வழி சாலையாக மாற்றும் திட்டத்திற்கான பணி நடைபெற்று வருகிறது. இந்த சாலை விரிவாக்கத்திற்கு இருபுறங்களிலும் இருந்த விவசாயிகள் தங்கள் நிலங்களை கொடுத்தனர்.

  தற்போது இப்பணி நடைபெற்று முடியும் தருவாயில் சாலையின் இரு புறங்களிலும் இரும்பு கம்பிகள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதுபோன்று இரும்புக் கம்பிகள் பொருத்தினால் சாலையில் இருந்து விவசாய தோட்டங்களுக்கு செல்வதற்கு வழி இல்லாமல் போய்விடும் என்பதால் இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

  இதை தொடர்ந்து கம்பி அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தினர் . இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, ஏற்கனவே எங்கள் விவசாய நிலங்களை தார்சாலைக்காக அரசு கேட்டதால் கொடுத்தோம். தற்போது மீதி உள்ள நிலங்களிலும் நாங்கள் செல்வதற்கு தடை ஏற்படுத்தும் விதமாக 2 புறங்களிலும் இரும்புக்கம்பி பொருத்தினால் நாங்கள் எப்படி தோட்டத்துக்கு செல்ல முடியும்?

  எங்களுக்கு இரு பகுதிகளிலும் சர்வீஸ் சாலை அமைத்து கொடுத்துவிட்டு இரும்புக் கம்பியை பொருத்திக் கொள்ளுங்கள் என்றனர். இது குறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து விவசாயிகளிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

  Next Story
  ×