search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தே.மு.தி.க. நகர, ஒன்றிய செயலாளர்களுடன் பிரேமலதா 3 நாட்கள் ஆலோசனை
    X

    தே.மு.தி.க. நகர, ஒன்றிய செயலாளர்களுடன் பிரேமலதா 3 நாட்கள் ஆலோசனை

    • மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை தொடர்ந்து தே.மு.தி.க. நகர, ஒன்றிய செயலாளர்களுடன் பகுதி, பேரூர் நிர்வாகிகளுடன் பிரேமலதா ஆலோசனை நடத்த உள்ளார்.
    • இந்த ஆலோசனை கூட்டம் வருகிற 14, 15, 16 ஆகிய தேதிகளில் கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. அலுவலகத்தில் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    சென்னை:

    தே.மு.தி.க.வை மீண்டும் வலுப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் அக்கட்சியின் பொருளாளரான பிரேமலதா தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.

    விஜயகாந்த் உடல்நிலை பாதிக்கப்பட்டதை தொடர்ந்து தே.மு.தி.க. தொடர்பான முடிவுகளை பிரேமலதாவே எடுத்து வருகிறார்.

    2024-ம் ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு பிரேமலதா செயல்பட்டு வருகிறார்.

    இதையடுத்து கட்சி நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

    கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. அலுவலகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்களுடன் பிரேமலதா ஆலோசனை நடத்தினார்.

    இந்த ஆலோசனை கூட்டத்தில் கட்சியின் முன்னணி நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.

    அவர்கள் மத்தியில் பேசிய பிரேமலதா மக்கள் பிரச்சினைகளுக்கு தே.மு.தி.க.வினர் தங்களது பகுதியில் குரல் கொடுக்க வேண்டும் என்றும், அப்போது தான் மக்கள் மத்தியில் மேலும் செல்வாக்கை பெற முடியும் என்றும் கூறியுள்ளார்.

    கூட்டத்தில் பேசிய மாவட்ட செயலாளர்கள் பலர் தே.மு.தி.க. செயல் தலைவராக நீங்கள் பொறுப்பேற்க வேண்டும் என்றும், இளைஞர் அணியை வழி நடத்தும் பொறுப்பை விஜயபிரபாகரனிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர்.

    இது தொடர்பாக முடிவு எடுத்து தே.மு.தி.க. தலைமை முக்கிய அறிவிப்புகளை வெளியிட உள்ளது.

    மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை தொடர்ந்து தே.மு.தி.க. நகர, ஒன்றிய செயலாளர்களுடன் பகுதி, பேரூர் நிர்வாகிகளுடன் பிரேமலதா ஆலோசனை நடத்த உள்ளார்.

    இந்த ஆலோசனை கூட்டம் வருகிற 14, 15, 16 ஆகிய தேதிகளில் கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. அலுவலகத்தில் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    தொடர்ச்சியாக 3 நாட்கள் நடக்கும் இந்த கூட்டத்தில் பிரேமலதா கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகளுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்க உள்ளார்.

    இந்த கூட்டம் முடிந்ததும் நிர்வாகிகள் தேர்தல் நடத்தப்படுகிறது. இதன் பின்னர் தே.மு.தி.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்துக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    Next Story
    ×