என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  இன்ஸ்டாகிராமில் பழகி சிறுமியிடம் 60 பவுன் நகையை மிரட்டி வாங்கினார்- வாலிபர் மீது வழக்கு
  X

  இன்ஸ்டாகிராமில் பழகி சிறுமியிடம் 60 பவுன் நகையை மிரட்டி வாங்கினார்- வாலிபர் மீது வழக்கு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சிறுமியின் பெற்றோர் பீரோவை திறந்து பார்த்தபோது அதில் இருந்த நகைகள் மாயமானது தெரியவந்தது.
  • நகைகள் மாயமானது குறித்து மகளிடம் விசாரணை நடத்தியதில் சதீஷ்குமாரிடம் நகையை கொடுத்ததாக ஒப்புக்கொண்டார்.

  அவனியாபுரம்:

  மதுரை வில்லாபுரம் ஹவுசிங் போர்டு காலனியை சேர்ந்த 16 வயது சிறுமி கடந்த 6 மாதங்களாக இன்ஸ்டாகிராம் மூலம் மதுரை எம்.கே. புரத்தை சேர்ந்த சதீஷ்குமார் (வயது 22) என்பவருடன் பழகி வந்துள்ளார்‌.

  இருவரும் நேரில் சந்தித்து காதல் ஜோடிகள் போல் சுற்றி வந்தனர். இதனை பயன்படுத்தி சதீஷ்குமார் அந்த சிறுமியிடம் இருந்து 60 பவுன் தங்க நகையை வாங்கி விற்று உல்லாசமாக இருந்துள்ளார்.

  சிறுமியின் பெற்றோர் பீரோவை திறந்து பார்த்தபோது அதில் இருந்த நகைகள் மாயமானது தெரியவந்தது. இது குறித்து மகளிடம் விசாரணை நடத்தியதில் சதீஷ்குமாரிடம் நகையை கொடுத்ததாக ஒப்புக்கொண்டார்.

  இது குறித்து சிறுமியின் பெற்றோர் அவனியாபுரம் போலீஸ் நிலையத்தில் சதீஷ்குமார் மீது புகார் செய்தனர். அதில் எனது மகளிடம் சதீஷ்குமார் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி 60 பவுன் நகையை மிரட்டி வாங்கியதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Next Story
  ×