என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  பட்டுக்கோட்டை அருகே கார் மோதி 2 விவசாயிகள் பலி
  X

  பட்டுக்கோட்டை அருகே கார் மோதி 2 விவசாயிகள் பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கார் மோதி விவசாயிகள் 2 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  பட்டுக்கோட்டை:

  தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள கரம்பயம் கிராமத்தை சேர்ந்தவர்கள் நடேசன் (வயது 65), முத்துசாமி (63). இருவரும் விவசாயக் கூலி தொழிலாளிகள்.

  இவர்கள் இன்று காலை அப்பகுதியில் உள்ள கூட்டுறவு சங்கம் அருகில் பால் வியாபாரம் செய்து வரும் சாமிக்கண்ணு என்பவருடன் சாலையோரம் நின்று பேசி கொண்டிருந்தனர்.

  அப்போது தஞ்சையில் இருந்து பட்டுக்கோட்டை நோக்கி அதிவேகமாக கார் வந்து கொண்டிருந்தது. திடீரென அந்த கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி நடேசன், முத்துசாமி ஆகிய 2 பேர் மீதும் மோதி அருகே உள்ள பள்ளத்துக்குள் புகுந்து நின்றது.

  இதில் தூக்கி வீசப்பட்ட நடேசன், முத்துசாமி ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். சாமிக்கண்ணு அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

  மேலும் காரின் முன்பக்கம் முழுவதும் பலத்த சேதம் அடைந்தது.

  இது குறித்து தகவல் அறிந்த பட்டுக்கோட்டை தாலுக்கா போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து நடேசன், முத்துசாமியின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

  இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கார் மோதி விவசாயிகள் 2 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

  Next Story
  ×