search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 21 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு
    X

    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 21 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு

    • ஒகேனக்கல் காவிரியில் வரும் தண்ணீர் அப்படியே மேட்டூர் அணைக்கு வருகிறது.
    • மேட்டூர் அணைக்கு நேற்று காலை 19 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை மேலும் அதிகரித்து 21 ஆயிரம் கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

    மேட்டூர்:

    கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் ஒகேனக்கல்லுக்கு தொடர்ந்து வருகிறது. இதற்கிடையே காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்வதால் மீண்டும் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    ஒகேனக்கல்லில் நேற்று முன்தினம் விநாடிக்கு 24 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று மாலை மீண்டும் 26 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. இதனால் ஒகேனக்கலில் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் அருவிகளில் குளிக்க தொடர்ந்து தடை நீடிக்கிறது.

    ஒகேனக்கல் காவிரியில் வரும் தண்ணீர் அப்படியே மேட்டூர் அணைக்கு வருகிறது. மேட்டூர் அணைக்கு நேற்று காலை 19 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை மேலும் அதிகரித்து 21 ஆயிரம் கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

    அணை முழு கொள்ளளவான 120 அடியாக நீடிப்பதால் அணைக்கு வரும் தண்ணீர் கடந்த சில நாட்களாக அப்படியே காவிரியில் வெளியேற்றப்படுகிறது. அதன்படி அணையில் இருந்து இன்று காலை 21 ஆயிரத்து 600 கன அடி தண்ணீர் காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது.

    இதில் 21 ஆயிரம் கன அடி தண்ணீர் நீர்மின் நிலையங்கள் வழியாகவும், கால்வாயில் 600 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது. நீர்வரத்து மீண்டும் அதிகரித்துள்ள நிலையில் இனிவரும் நாட்களில் மேலும் நீர்வரத்து அதிகரித்தால் 16 கண் மதகு வழியாக தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளது.

    Next Story
    ×