என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 10 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு
- ஒகேனக்கல் காவிரியில் வரும் தண்ணீர் நேராக மேட்டூர் அணைக்கு வருகிறது.
- மேட்டூர் அணைக்கு நேற்று காலை விநாடிக்கு 5 ஆயிரத்து 894 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் அதிகரித்து 10 ஆயிரத்து 212 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.
மேட்டூர்:
கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகள் மற்றும் ஒகேனக்கல் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள காவிரி கரையோர நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் ஒகேனக்கல்லில் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் ஓகேனக்கல் அருவிகளில் ஆனந்தமாக குளித்தும், உற்சாகமாக குடும்பத்துடன் படகு சவாரி சென்றும் இயற்கை அழகை ரசித்து வருகிறார்கள்.
ஒகேனக்கல் காவிரியில் வரும் தண்ணீர் நேராக மேட்டூர் அணைக்கு வருகிறது. மேட்டூர் அணைக்கு நேற்று காலை விநாடிக்கு 5 ஆயிரத்து 894 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் அதிகரித்து 10 ஆயிரத்து 212 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.
அணையில் இருந்து குறுவை சாகுபடிக்கு காவிரி ஆற்றில் விநாடிக்கு 15 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு வரும் தண்ணீரை விட, அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.
நேற்று முன்தினம் 110.77 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று மேலும் சரிந்து 109.89 அடியானது.