என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  மருந்து கடைகளில் பள்ளி மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்பனை- கடைஉரிமையாளர் உள்பட 5 பேர் கைது
  X

  மருந்து கடைகளில் பள்ளி மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்பனை- கடைஉரிமையாளர் உள்பட 5 பேர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மதுரை மாவட்டத்தில் மூலைக்கு ஒன்றாக மருந்து கடைகள் உள்ளன.
  • மாத்திரைகள் உயிருக்கு மிகவும் ஆபத்தானவை.

  மதுரை:

  மதுரை காமராஜர் சாலையில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் சிறுவர்கள் போதை மாத்திரைகள் பயன்படுத்துவதாக தெப்பக்குளம் போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் போலீசார் ஒன்றிரண்டு பேரை பிடித்து விசாரித்தனர்.

  அப்போது காமராஜர் சாலையில் உள்ள ஒரு மருந்து கடை போதை மாத்திரைகள் விற்கப்படுவது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அந்தக் கடையில் தெப்பக்குளம் போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

  அப்போது அங்கு பெட்டி-பெட்டியாக போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டன. இதனைத் தொடர்ந்து மெடிக்கல் ஸ்டோர் உரிமையாளர் தங்கராஜ் (வயது 38) என்பவரை தெப்பக்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாடசாமி கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

  இதே போல் மதுரை கருமாத்தூர் பகுதியில் நேற்று போதை மாத்திரைகள் விற்றதாக மெடிக்கல் ஸ்டோர் ஊழியர் அபிராமி மற்றும் 2 பொறியியல் பட்டதாரிகளை நாகமலை புதுக்கோட்டை போலீசார் கைது செய்தனர்.

  மதுரை மாவட்டத்தில் மூலைக்கு ஒன்றாக மருந்து கடைகள் உள்ளன. இங்கு நோயை குணப்படுத்தும் மருந்து-மாத்திரைகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. 'டாக்டர்கள் பரிந்துரை செய்யும் மருந்து மாத்திரைகளை மட்டுமே பொதுமக்களுக்கு விநியோகிக்க வேண்டும்' என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.

  இருந்தபோதிலும் மதுரையில் சில மருந்து கடைகள் அரசின் உத்தரவை மீறி டாக்டர்களின் பரிந்துரை இன்றி, மருந்து மாத்திரைகளை விற்பனை செய்து வருகின்றனர்.

  மருத்துவத்துறையில் தூக்க மாத்திரை, நரம்பு வியாதிக்கான மாத்திரை, மற்றும் கர்ப்ப காலத்தில் நோயாளி தரப்படும் மாத்திரை ஆகியவை குறிப்பிடத்தக்கவை ஆகும். இவை வலி நிவாரணி ஆகும். ஆனால் நோய்நொடி இல்லாத ஒருவர் மேற்கண்ட மாத்திரைகளை பயன்படுத்தும் போது, சம்பந்தப்பட்டவருக்கு அளவுக்கு மீறிய தூக்கம், மெய்மறந்த நிலை ஆகியவை ஏற்படும்.

  அதே நேரத்தில் இந்த மாத்திரைகள் உயிருக்கு மிகவும் ஆபத்தானவை. மேற்கண்ட மாத்திரைகளை ஒருவர் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், அவருக்கு கிட்னி கோளாறு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

  Next Story
  ×