என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  பொருளாதார பிரச்சினையில் மத்திய அரசுக்கு பெரும் தோல்வி- கே.எஸ்.அழகிரி
  X

  பொருளாதார பிரச்சினையில் மத்திய அரசுக்கு பெரும் தோல்வி- கே.எஸ்.அழகிரி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • 5ஜி அலைக்கற்றை ஏலத்தில் மிகப்பெரிய முறைகேடு நடைபெற்றுள்ளது.
  • எந்த தகுதியும் இல்லாத அதானி ஏலத்தில் பங்கு கொள்வதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

  நாகர்கோவில்:

  தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி இன்று நாகர்கோவிலில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

  காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அடுத்த மாதம் 7, 8-ந் தேதிகளில் கன்னியாகுமரி மாவட்டத்தில் பாத யாத்திரை செய்கிறார். இன்று நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் அவர் நடைபயண நிகழ்ச்சி குறித்த விபரங்கள் இறுதிச் செய்யப்படும்.

  மத்திய அரசு அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரியை விதித்துள்ளது. இது ஏழை, எளிய மக்களை கடுமையாக பாதிக்கும். ஆனால் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் இதை ஏழை எளிய மக்களை பாதிக்காது என்று கூறி உள்ளார். இது ஏற்கத்தக்கது அல்ல. மத்திய அரசு கடந்த 5 ஆண்டுகளில் 10 லட்சம் கோடி ரூபாய் பெரிய தொழில் அதிபர்களுக்கு வங்கி கடன் தள்ளுபடி செய்துள்ளது.

  அதே நேரத்தில் ஏழை எளிய மக்கள் மீது பல்வேறு வரிகளை விதித்து வருகிறது. பொருளாதார பிரச்சனையில் இந்திய அரசு பெரிய தோல்வியை சந்தித்துள்ளது. பொருளாதாரம் குறித்து அவர்களுக்கு எடுத்து சொல்வதற்கு யாரும் இல்லாத நிலை இருந்து வருகிறது. அதே நேரத்தில் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் பிரதமர் மன்மோகன் சிங் பொருளாதர நிபுணராக இருந்துள்ளார். அதனால் பொருளாதாரம் பிரச்சனைகளை அவர் எளிதாக கையாண்டார். ஆனால் தற்போதைய மோடி அரசுக்கு பொருளாதாரம் பற்றி தெரியாதவர்கள் இருக்கிறார்கள். அதனால் மத்திய நிதியமைச்சரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை நான் வலியுறுத்த மாட்டேன். பிரதமர் மோடியை மாற்ற வேண்டும்.

  பீகார் நிலவரத்தை சபாஷ் என்றே கூறலாம். அங்கு சரியான போட்டி ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் பலம் வாய்ந்த சிவ சேனாவை உடைத்து பாரதிய ஜனதா கட்சி அங்கு மறைமுகமாக ஆட்சியை ஏற்படுத்தி உள்ளது. அது போன்ற நிலையை பீகாரில் செய்ய அவர்கள் முயற்சித்தனார். அது அவர்களுக்கு மிகப்பெரிய தோல்வியாக வந்துள்ளது.

  ஆங்கில பத்திரிக்கை கருத்துக்கணிப்பில் தமிழக முதலமைச்சர் மு.க .ஸ்டாலின் சிறந்த முதலமைச்சர்களின் 3-வது இடத்தை கொடுத்துள்ளது. ஆனால் உண்மையிலேயே அவர் இந்தியாவிலேயே சிறந்த முதல்வராக செயல்பட்டு வருகிறார். பல்வேறு திட்டங்களை அவர் செயல்படுத்தி வருகிறார். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு மிகச் சிறப்பாக இருக்கிறது. பொதுவாக ஆட்சியில் உள்ளவர்கள் தவறுகளை ஏற்றுக் கொள்வதில்லை. ஆனால் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பொறுத்தவரையில் அவர் தவறுகள் நடந்தால் உடனடியாக அதன் மீது நடவடிக்கை மேற்கொள்கிறார். தவறுகள் நடைபெறாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கிறார். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது.

  5ஜி அலைக்கற்றை ஏலத்தில் மிகப்பெரிய முறைகேடு நடைபெற்றுள்ளது. எந்த தகுதியும் இல்லாத அதானி இந்த ஏலத்தில் பங்கு கொள்வதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

  இதிலிருந்து முறைகேடு நடைபெற்று உள்ளது தெளிவாக உள்ளது.

  முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். ஈரோட்டில் நடந்த நெசவாளர் பிரச்சனையாக இருந்தாலும் சரி, கள்ளக்குறிச்சி பள்ளி விவகாரத்திலும் துரித நடவடிக்கை எடுத்தார். தேர்தல் அறிக்கையில் கூறியது போல் பெட்ரோல், டீசல் விலையை ரூ.3 குறைத்துள்ளார். 75-வது சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடுவது பாராட்டுக்குரியது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் ஏற்கனவே 2 முறை மட்டுமே கொண்டாடி உள்ளனர். இப்போது சிறப்பாக கொண்டாட காரணம் தெரியவில்லை. மக்கள் விரும்புவது காமராஜர் ஆட்சியை தான். அதனை சித்தாந்தா முறையில் செயல்படுத்தப்படும். 2024-ம் ஆண்டு ராகுல்காந்தி பிரதமர் பொறுப்புக்கு வருவார்.

  இவர் அவர் கூறினார்.

  Next Story
  ×